பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 189

 

மனோவதியில் வளர்த்தலின் தெய்வயானை எனப் பெயர் போந்தது.

கருத்துரை

சிவகுமாரரே! செங்கோடரே! தெய்வயானை கணவரே! அசுரகுல காலரே! அடியேன் அந்தகனுடன் பொரும் போரைக் காண தேவரீர் முன் வந்ததுபோல் மற்றொரு முறை வரவேணும்.

கொல்லி மலை

162

கட்ட மன்னு மள்ளல் கொட்டி பண்ணு மைவர்
கட்கு மன்னு மில்ல மிதுபேணி
கற்ற விஞ்ஞை சொல்லி யுற்ற வெண்மை யுள்ளு
கக்க எண்ணி முல்லை நகைமாதர்
இட்ட மெங்ங னல்ல கொட்டி யங்ங னல்கி
யிட்டு பொன்னை யில்லை யெனஏகி
எத்து பொய்ம்மை யுள்ள லுற்று மின்மை யுள்ளி
யெற்று மிங்ங னைவ தியல்போதான்
முட்ட வுண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள
முட்ட நன்மை விள்ள வருவோனே
முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி
முத்தி விண்ண வல்லி மணவாளா
பட்ட மன்ன வல்லி மட்ட மன்ன வல்லி
பட்ட துன்னு கொல்லி மலைநாடா
பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே.

பதவுரை

முட்ட உண்மை சொல்லு செட்டி-முழு உண்மையைச் சொன்ன செட்டியாக, திண்மை கொள்ள-சங்கப் புலவர்கள் உறுதிப் பொருளை அறிந்துகொள்ள, முட்ட நன்மை விள்ள-முழுவதும் நன்மையே பெருக, வருவோனே-வந்தவரே! முத்துவண்ண வல்லி-முத்துபோன்ற நிறமுடைய வல்லியும், சித்ர வண்ண வல்லி-அழகிய நிறம் படைத்த வல்லியும், முத்தி விண்ண வல்லி-முத்திதரவல்ல விண்ணுலக வல்லியும், ஆகிய தேவயானை யம்மையின், மணவாளா-கணவரே, பட்டம்-