கான் ஆறுபாயும்காட்டாறு பாய்கின்ற, ஏரி-ஏரிகளும், வயல் பயில்-வயல்களும் நெருங்கியுள்ள, கோனாடு சூழ்-கோனாட்டி விளங்கும், விராலிமலை, உறை- விராலிமலையில் எழுந்தருளியிருக்கும், பெருமாளே, பெருமையிற் சிறந்தவரே! பாதாளம் ஆதி லோக நிகிலமும்-பாதாளம் முதலிய உலகங்கள் எல்லாவற்றுக்கும், ஆதாரம் ஆன-ஆதாரமாகிய மேரு என வளர்-மேருமலை போல் உயர்ந்து வள்ாந்துள்ளதும், பாடீர-சந்தனம் அணிந்ததும், பாரம் ஆன- பாரமுள்ளதுமாகிய முலையினை விலை கூறி-கொங்கையை விலை பேசி, பாலோடு பாகு தேன் என் இனிய சொலாலே-பால், சர்க்கரைபாகு, தேன் என்றவை போன்ற இனிய மொழிகளால், அநேக மோகம் இடுபவர்- எண்ணில்லாத மோகத்தைச் செய்பவர்களாகிய பொதுமாதருடைய, பாதாதி கேசம் ஆக-அடிமுதல் முடிவரையுள்ள உறுப்புக்களை, வகைவகை கவிபாடும்- வகை வகையாகப் புகழ்ந் கவிகள் காடுகின்ற, வேதாள-பேயன், ஞான கீனன்- அறிவு குறைந்தவன், விதரண நாதான் இலாதபாவி-விவேகமுள்ள நாக்கு இல்லாத பாவி, அநிஜவன்-உண்மையேயில்லாதவன், வீண் நாள் படாதபோத தவம் இலி-வீணாள் உண்டாகாமற் காக்கும் அறிவும் தவமும் இல்லாதவன், பசு பாசவ்யாபாரமூடன்-உயிரைப் பற்றியும் உலகத்தைப் பற்றியுமே பேசி வியாபாரஞ் செய்கின்ற மூடனாகிய, மூடனாகிய யானும்-அடியேனும், உனது இருசீர்பாத தூளி ஆகி-தேவரீருடைய இரு சிறந்த திருவடிகளின் தூளியாகும் பேறு பெற்று, நரகு இடை வீழாமலே-நரகத்தில் வீழாதபடி, சுவாமி-உடையவரே! திருஅருள் புரிவாயே! திருவருள் புரிந்தருள்வீராக. பொழிப்புரை தனது தூதர்களுடன்காலன் அஞ்சவும், பிரமனும் திருமாலும் அஞ்சி ஓடவும், கொல்லவல்ல ஆயுதங்கள் சோர்ந்து போய் இந்திரனுடைய சேனைகள் பொடிபட்டு அழியவும், வேதமந்திரங்களுடன் கூடிய யாகங்கள், சோமயாகம் முதலிய செய்யும் பெரியோர்கள் சிவாயநம என்று துதி செய்யவும், பெரிய மாயங்களைச் செய்து வீரமாகவும் கோரமாகவும் போர்புரிந்த சூரபன்மன் மாளும்படி வேலைவிடுத்தருளிய இளையவரே! வயலூரில் எழுந்தருளிய இளையவரே! கூதாள மலரிலும், கடப்ப மலரிலும், சுரபுன்னை மலரிலும், மொய்த்து, சாதாரிபண், தேசி, நாதநாமக்கிரியை முதலிய பண்களையும் கோலாகலமாகப் பாடி நாதகீதங்கள் ஒலிக்கின்ற வண்டுகள் நிறைந்த சோலைகளும், மிகுந்த ஆரல் மீன்களை ஆய்ந்து இரையாகத் தேடுகின்ற நாரைகள் வாழ்கின்ற காட்டாறுகள் பாயும் ஏரிகளும், வயல்களும் நெருங்கியுள்ள, விராலிமலையில் வீற்றிருக்கும் பெருமிதமுடையவரே! பாதாளம் முதலிய உலகங்கள் எல்லாவற்றுக்கும் |