பக்கம் எண் :


190 திருப்புகழ் விரிவுரை

 

வழியில், மன்னு அ வல்லி-நிலைபெற்ற அந்த வல்லி, மட்டம் மன்னு அவல்லி- மது வைப்போல் மாயக்கதரும் கொல்லிப்பாவை, பட்ட-இருக்கும், துன்னுகொல்லி மலைநாடா-நெருங்கிய கொல்லிமலை நாட்டு அரசே! பச்சை வன்னி-பசுமையான வன்னிப்பத்திரமும், அல்லி-அல்லி மலரும், செச்சை- வெட்சி மலரும், அணிந்துள்ள, சென்னி உள்ள-தலையையுடையவரே! பச்சை மஞ்ஞை வல்ல-பச்சை மயிலை நடாத்தவல்ல, பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! கட்டம் மன்னும் அல்லல்-கஷ்டங்கள், பொருந்தியுள்ள சேறு போனற்தும், கொட்டி பண்ணும்-கொடு கொட்டி ஆடல் போலக் கூத்தாட்டி வைக்கும், ஐவர்க்கும், மன்னும் இல்லம்-ஐம்புலன் கட்கும் இருப்பிடமான வீடுபோன்றதுமாகிய, இது பேணி-இந்த உடலை விரும்பி, கற்ற விஞ்ஞை சொல்லி-அடியேன் கற்ற வித்தைகளைச் சொல்லி, உற்ற எண்மை-உற்ற எளிமையை, உள் உகக்க எண்ணி-உள்ளம் மகிழ நினைத்து, முல்லை நகை மாதர்-முல்லையரும்பு போன்ற பற்களையுடைய பெண்களின், இட்டம எங்ஙன்.விருப்பம் எப்படியோ அப்படி, நல்ல கொட்டி அங்ஙன் நல்கி இட்டு- நல்ல பொருள்களையெல்லாம் ஒன்றாகக் கொட்டி அவர்களுக்குக் கொடுத்து, பொன்னை இல்லை என - பின்னும் கொடுப்பதற்குப் பொன் இல்லையென்று சொல்ல, ஏகி ஏத்து-வெளிவந்து ஏமாற்றும் பொருட்டு, பொய்மை உள்ளம் உற்றும்-பொய்வழியை யோசித்தும், இன்மை உள்ளி எற்றும்-பொன் இல்லாமையை நினைந்து இரக்கமுற்றும், இங்ஙன் நைவது இயல்பேதான்- இவ்வாறு மனம் நைந்து வருந்துதல் தக்கதாமோ? (தகாது.)

பொழிப்புரை

செட்டிக் குமரனாகி சங்கப் புலவர் உறுதிப் பொருளை அறிந்துகொள்ளும் பொருட்டு முழு உண்மையைச் சொல்லி, முழுவதும் நன்மையே பெருக வந்தருளியவரே! முத்து நிறவல்லியும், அழகிய வண்ணம் படைத்த வல்லியும், முத்திதரவல்ல விண்ணுலக மடந்தையுமாகிய தேவ சேனையின் கணவரே! வழியில் நிலைபெற்று மதுவைப் போல் மயக்கந்தரவல்ல கொல்லிப் பாவையிருக்கும் நெருங்கிய கொல்லிமலை நாட்டிற்குத் தலைவரே! பசுமையான வன்னியிலையும், அல்லிமலரும், வெட்சி மலரும், சூடிய சிரத்தினையுடையவரே! மரகத மயிலை நடத்தவல்ல பெருமிதம் உடையவரே! துன்பங்கள் பொருந்தியுள்ள சேறு போன்றதும், கொடு கொட்டி ஆடல்போல் கூத்தாட்டி வைக்கும் ஐம்புலன்களுக்கும் இருப்பிடமான வீடு போன்றதுமாகிய, இந்த உடலை விரும்பி, அடியேன் கற்ற வித்தைகளைச் சொல்லி, எளிதாக எண்ணங்கள்