பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 193

 

முத்திவிண்ணவல்லி:-

முத்திதரவல்லவர் அந்த அம்மை.

“செழுமுத்து மார்பின் அமுதத் தெய்வானை
   திருமுத்திமாதின் மணவாளா”           - (கழைமுத்து) திருப்புகழ்.

பட்டமன்ன வல்லி:-

பட்டம்-வழி. மன்னு அவள்ளி. வழியில் அமைந்த அந்த வல்லி.

கொல்லி மலையில் தேவரும் முனிவரும் வாழ்ந்து தவம் புரிந்தார்கள். அவர்களை அரக்கரும் அவுணரும் வந்து அடிக்கடித் துன்புறுத்தினார்கள்.

தேவ தச்சன் இமையவர்க்கும் இருடியர்க்கும் நன்மை செய்யக் கருதினான். ஓர் அழகிய பெண் பதுமையைச் செய்து வழியில் வைத்தான். கண்டவர்கள் மனத்தை ஈர்க்கும் கவினுடையது அது. உண்மையில் பெண் போல் காட்சி தரும் அங்கு வரும் அரக்கரின் வாடை பட்டவுடன் அது நகைக்கும். அப்படி நகைக்கும் ஒரு பொறியை அதனுள் தேவதச்சன் அமைத்தான். அதன் அழகில் மயங்கிய அரக்கர் அருகில் சென்றவுடன் மாய்ந்து ஒழிவார்கள். இப்பாவை “கொல்லிப்பாவை” எனப்படும்.

.................................................................................”திரிபுரத்தைச்
செற்றவனும், சொல்லிச் செழும்பாவையும் நகைக்கக்
கற்றதெல்லாம்இந்த நகை கண்டேயோ” -நற்றிணை(85)

இது காற்றுக்கும் மழைக்கும் இடிக்கும் பூகம்பம் முதலிய இடையூறுகட்கும் அழியாமல், என்றும் தன் இயல்பு கெடாமல் அமைந்தது.

“கொல்லித்தெய்வம்................................................
   கால்பொருதிடிப்பினும், கதழுறைகடுகினும்,
   உருமுடனன் றெறியினும், ஊறுபல தோன்றினும்
   பெருநிலங் கிளரினும், திருநலவுருவின்,
   மாயா இயற்கைப் பாவை.                               நற்றினை (201)

அதனால்மன்னு-நிலைபெற்ற வல்லி என்று அருளினார்.

மட்டமன்ன வல்லி:-

மட்டம் - கள்.

“மட்டம்பெய்த மணிக்கலம்”                         - குறுந்தொகை (193)

பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி:-

முருகவேள் சிரத்தின் மீது வன்னிப் பத்திரமும், அல்லி மலரும், வெட்சி மலரும் சூடிக்கொண்டிருப்பர்.