பக்கம் எண் :


194 திருப்புகழ் விரிவுரை

 

கொல்லிமலை சேலம் ஜில்லா நாமக்கல்லுக்கு அருகில் உள்ளது.

கருத்துரை

கொல்லி மலைக்குத் தலைவராய குமாரக் கடவுளே! மாதராசையால் பொருளை நாடி வருந்துவது தகாது.

163

தொல்லைமுதல்தானொன்று மெல்லியிரு பேதங்கள்
சொல்லுகுண மூவந்த       மெனவாகி
துய்யசதுர்வேதங்கள் வெய்யபுல னோரைந்து
தொய்யு பொரு ளாறங்      மெனமேவும்
பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
பல்குதமிழ் தானொன்றி        யிசையாகிப்
பல்லுயிரு மாயந்த மில்லைசொரு பானந்த
பௌவமுற வேநின்ற        தருள்வாயே
கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு
கல்வருக வேநின்று       குழலூதுங்
கையன்மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை
கைதொழ மெய்ஞ் ஞானஞ்சொல்       கதிர்வேலா
கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று
கொள்ளைகொளு மாரன்கை       யலராலே
கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த
கொல்லிமலை மேனின்ற       பெருமாளே.

பதவுரை

கல்உருக-கல்உருகும்படியும், அல்லல் படு-துன்பப்படுகின்ற, கோ-பசுக்கள், அம் புகல் வருகவே நின்று-அழகிய புகுமிடத்திற்கு வந்து சேரும்படியும் நின்று, வேயின்கண் குழல் ஊதும்-மூங்கிலால் அமைந்த புல்லாங்குழல் வாசித்த, கையன் மிசை ஏறு-கண்ணபிரானாகிய மால் விடையின்மீது ஏறுகின்ற, உம்பன்-பெரியோனும், நொய்ய சடையோன்-புன்சடையோனும், எந்தை-எமது பிதாவுமாகிய சிவபெருமான், கை தொழ-கைகுவித்துத் தொழ, மெய்ஞானம் சொல்-உண்மை ஞானத்தை உபதேசித்த, கதிர் வேலா-ஒளிமிகுந்த வேலாயுதரே! கொல்லை மிசை வாழ்கின்ற-தினைக் கொல்லையில் வாழ்ந்திருந்த, வள்ளி புனமே சென்று-வள்ளி நாயகியின் புனத்தில் சென்று, கொள்ளை கொளும்- உயிரைக் கொள்ளை கொள்ளுகின்ற, மாரன் கை அலராலே-மன்மதனுடைய கை மலர்க்கணையின் செய்கையால், தழையே கொய்து கொண்டு செல்லும்-