தழைகளைக் கொய்து கொண்டு சென்ற, மழவா-கட்டழகுடையவரே! கந்த- கந்தக்கடவுளே! கொல்லிமலைமேல் நின்ற-கொல்லிமலை மீது எழுந்தருளியுள்ள பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! தொல்லை முதல் தான் ஒன்று-பழம் பொருள் முதற் பொருள் எனத்தான் ஒன்றே விளங்குவதாய், மெல்லிய இரு பேதங்கள்-சத்திசிவம் என்னும் இரு வேறு தன்மையதாய், சொல்லு குணமே அந்தம் என ஆகி-சொல்லப்படுகின்ற முக்குணங்களின் முடிவின் வடிவாய் விளங்கும் மும்மூர்த்திகளாய், துய்ய சதுர்வேதங்கள்-பரிசுத்தமான நான்கு வேதங்களாய், வெய்ய புலன் ஒர் ஐந்து-கொடிய புலன்களாகிய சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஓர் ஐந்தையும், தொய்யு பொருள்-சோர்வடையச் செய்யும் பொருளைக் கொண்ட, ஆறு அங்கம் எனமேவும்-ஆறு வேதாங்கங்களாய், பலபல நாதங்கள்-பலப்பல ஒலிகளில் தங்குவதாய், அல்க பச பாசங்கள்-உயிர் தளைகள் இவற்றின் தன்மைகுறையும் பொருட்டு அவற்றில் தங்குவதாய், பல்கு தமிழ் தான் ஒன்றி-பெருகின்ற தமிழில் பொருந்தி, இசை ஆகி-இன்னியைாய், பல் உயிரும் ஆய்-பல உயிர்களுமாய், அந்தம் இல்ல- முடிவில்லாத தாயுள்ள, சொருப ஆனந்த பௌவம் உறவே நின்றது-ஆனந்த உருவக் கடலை அடையும்படி செய்யவல்ல பொருள் எதுவோ அந்தப் பொருளை, அருள்வாயே-அருளுவீராக. பொழிப்புரை கல்லுருகுமாறும், துன்பப்படும் பசுக்கள் அழகிய புகுமிடத்திற்கு வந்து சேருமாறும் நின்று புல்லாங் குழல் ஊதிய திருமாலாகிய இடபத்தின் மீது ஏறுகின்ற பெரியோனும், புன்சடையோனும், எமது பரமபிதாவுமாகிய சிவபெருமான் கைகூப்பித் தொழ, உண்மைப் பொருளை உபதேசித்த ஒளிமிகுந்த வேலாயுதரே! தினைப்புனத்தில் வள்ளிபிராட்டியின் வனத்திற் சென்று, உயிரைக் கொள்ளை கொள்ளுகின்ற மன்மதனுடைய கைமலர்க் கணையின் செய்கையால், தழை கொய்து கொண்டு சென்ற கட்டழகுடையவரே! கந்தவேளே! கொல்லி மலைமீது நின்ற பெருமித முடையவரே! பழம்பொருள் முதற்பொருள் எனத்தான் ஒன்றே விளங்குவதாய், சக்தி சிவம் என்ற இரு வேறு தன்மையதாய், சொல்லப்படும் தாமதம் இராசஸம் சாத்துவீகம் என்ற முக்குண முடிவின் வடிவாய் மும்மூர்த்திகளாய், பரிசுத்தமான நான்கு வேதங்களாய், கொடிய புலன்களாய், சுவை ஒளி ஊறு ஓசை, நாற்றம் என்ற ஐந்ததையும் சோர்வடையச் செய்யும் ஆறங்கங்களாய், பலப்பல ஒலிகளில் தங்குவதாய், உயிர் தளைகளின் குற்றம் நீங்க அவற்றுள் தங்குவதாய், பெருகும் தமிழிற் பொருந்திய இன்னிசையாய், பல உயிர்களுமாய், முடிவில்லாத |