தாய் உள்ள ஆனந்த உருவக் கடலை அடையும்படிச் செய்ய வல்ல பொருள் எதுவோ அந்தப்பொருளை அருளுவீராக. விரிவுரை தொல்லை முதல் தானொன்று:- இத் திருப்புகழ் எண்ணலங்காரமாக ஒன்று முதல் ஆறு வரை வருகின்ற அழகு கவித் திறத்தைக் காட்டுகின்றது. இதேபோல் திருமந்திரத்திலும் வருவது காண்க. ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன்; ஏழும்பர்ச் சென்றனன் தானிருந்தான் உணர்ந்தெட்டே. இறைவன் ஒருவனே முதல்வன். மெல்லியிரு பேதங்கள்:- சக்தியும் சிவமுமாக விளங்கி இறைவன் உயிர்கட்கு அருள் புரிகின்றான். தட்ப வெப்பத்தால் உலகம் நடைபெறுகின்றது. தட்பத்தின் சூட்சமும் சக்தி; வெப்பத்தின் சூட்சுமம் சிவம்.. சொல்லு குண மூவந்த மெனவாகி:- சத்துவம், இராஜஸம், தாமதம் என்ற முக்குணங்களின் முடிவின் சொரூபமாய் அரன் அயன் அரி என்ற மும்மூர்த்திகளும் தொழிற்படுகின்றார்கள். அம்மூர்த்திகளை அதிஷ்டித்து இறைவன் அருள்புரிகின்றான். “அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி அவர்மேலாய்” - (அகரமு) திருப்புகழ். துய்ய சதுர் வேதங்கள்:- வேதம் நான்கு. ருக், யஜுர், சாமம், அதர்வணம். வெய்யபுல னோரைந்து:- புலன்கள், சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம். இவற்றை வென்றவர் உலகை வென்றவராவார். உரன் என்னுந்தோட்டியான் ஓரைந்துங் காப்பான் வரன் என்னும்வைப்பிற்கோர் வித்து சுவைஒளி ஊறுஓசை நாற்றம் என்று ஐந்தின் வகைதெரிவான்கட்டே உலகு - திருக்குறள் இந்த ஐந்த புலன்களையும் அடக்குவார் பலர். அடக்குகின்றவரையில் அவை அடங்கும். பின்னர் முன்னையினும் வேகமாக மேலெழும். ஐந்தையும் அவித்துவிட வேண்டும். அவித்த |