பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 197

 

நெல் முளைக்காது. அவித்த புலன்கள் தொழிற்பட மாட்டா.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான்
இந்திரனே காலுங்கரி                                   - திருக்குறள்.

“இந்தியங்களை யவித்திருத்தல் மேயினான்”- கம்பராமாயணம்.

தொய்யு பொருளாறங் மெனமேவும்:-

வேதபுருஷனுக்கு ஆறு அங்கள், சிட்சை, வியாகரணம், சந்தஸ், நிருத்தம், ஜ்யோதிஷம், கல்பம், இவை முறையே நாசி வாய், கால், காது, கண், கை.

(1) சிட்கை (நாசி)

எழுத்துக்களின் உச்சாரணம் மாத்திரை உற்பத்தி முதலியவற்றை வரையறுப்பது. “இந்திரன் சத்ரு” என்ற சொல்லின் உச்சாரண மாறுபட்டால் மாண்டான் துவஷ்டா.

(2) வ்யாகரணம்(வாய்)

நடேசப் பெருமானுடைய டமருகத்தில் எழுந்த 14 ஒலிகளையே பாணினி 14 சூத்திரங்களாக எழுதினார். இதுவே வியாகரணத்துக்கு மூலம். மகேச்வர சூத்ரம் எனப் பெறும். பாணினியின் சூத்திரத்துக்கு விரிவுரை செய்தவர் பதஞ்சலி.

சிவபெருமானுடைய மூச்சுக் காற்று வேதம் - கைக்காற்று - வியாகரணம்.

கால்காற்று-பாஷ்யம் (விரிவுரை)

திருவடியில் தரித்துள்ள ஆதிசேடன் பதஞ்சலியாக வந்து பாஷ்யம் செய்தார்.

(3) சந்தஸ் (கால்)

யாப்பு போன்றது சந்தஸ். இன்ன இன்ன பத்தியத்திற்கு இத்தனை எழுத்து; இத்தனை பதம்; இத்தனை மாத்திரை என்று வரையறுப்பது. பத்யம்-கவி. கத்யம்-வசனம். வேதமந்திரங்கள் சந்தஸ். மற்றவை சுலோகம். இவையில்லாமல் நிற் முடியாது ஆதலால் சந்தஸ் கால் போன்றது.

(4) நிருக்தம் (காது)

நிருக்தம்-நிகண்டு. ஏன்? இந்தப் பதம் இங்கு வந்தது? என்பதை விளக்குவது.

ஹ்ருதயம்-ஹ்ருதி-அயம் ஹ்ருதயத்தில் இவன் இருக்கின்றான் என்பது பொருள். பரமாத்வா உறைகின்றான் என்பது போன்ற காரணங்களைக் கூறுவது நிருக்தம்.

(5) ஜ்யோதிஷம் (கண்)