அல்லல்படு கோவம்பு கல்வருகவே:- கோ அம் புகல்பசுக்கள் அழகிய புகுமிடத்துக்கு வர வேய்ங் குழல் இசைத்தார். கையன்மிசை ஏறும்பன்:- கையன் - கண்ணன். ஏறு உம்பன். உம்பன்-உயர்ந்தவன். திரிபுரம் எரிக்க முயன்ற போது, தேவர்கள் விநாயகரை வணங்காமல் தொடங்கியதால் தேர் அச்சு முறிந்தது. அப்போது திருமால் இடபமாகி இவைனைத் தாங்கினார். கடகரியும் பரிமாவுந் தேருமுகந் தேறாதே இடபமுகந்தேறியவாறு எனக்கறிய இயம்பேடி தடமதில்கள்அவை மூன்றுந் தழலெரிந்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.
- திருவாசகம். கொய்து தழையே கொண்டு செல்லுமழவர்:- அகப்பொருளில் “தழைகொண்டு சேறல்” என்பது ஒரு துறை. குறிஞ்சீ நிலப்பெண்கள் தழையைத் தைத்து உடுப்பார்கள். அம்மாதரை விரும்பிச் செல்லுந்தலைவன் கையுறையாகச் சந்தனம் முதலிய தழைகளை எடுத்துக்கொண்டு செல்வான். “.......................................................................மலயத்து ஆரத்தழையண்ணல் தந்தால் இவையவள் அல்குற்கண்டால் ஆர் அத்தழை கொடுவந்தார் எனவரும் ஐயுறவே” (91) திருக்கோவையர். “மரகத மணிப்பணியின் அணிதழையுடுத்துலவு வனசரர் கொடிச்சிதனை யாசிக்கும் யாசகனும்"
- திருவகுப்பு (12) “தழையுடுத்த குறத்தி பத்துணை வருடி வட்ட முகத்திலதக்குறி தடவி” - (பழைமை) திருப்புகழ். கருத்துரை கொல்லிமலைக் குமாரா! ஆனந்தக் கடலில் மூழ்க அருள் செய்வாய். இராஜ கெம்பீர வளநாட்டு மலை இராஜ கெம்பீர வளநாடு என்பது திருச்சிராப்பள்ளிக்கு மேற்றே வயலூரைச் சூழ்ந்த பகுதிக்குப் பேர். “இராஜ கெம்பீர நாடாளு நாயக வயலூரா” என்ற திருப்புகழ் வாக்கால் அறிக. இத்தகு வித்தக நாட்டில் உள்ள மலை. இராஜ கெம்பீர வளநாட்டு மலை. இது கற்குடி என்ற உய்யக் கொண்டான் மலையாக இருக்கும் என ஆன்றோர் கூறுவர். |