வானவர் எவர்களும்ஈடேற - தேவர்கள் யாவரும் உய்வுபெற்று உயர்வடையவும், ஏழ்கடல் முறையோ என்ற இடர்பட-ஏழுசமுத்திரங்களும்துன்புற்று ‘முறையோ‘ என்று கதறி வருந்தவும், மாமேரு பூதரம்இடிபடவேதான்-பெரியமேருமலை இடிபட்டு துகள்படவும், நிசாசரர் இகல் கெட- இரவிலே உலாவுகின்ற இராக்கதர்களின் போர்கெட்டு ஒழியவும், மாவேக நீடுஅயில் - மிக்க வேகத்தையுடைய நீண்ட வேலாயுதத்தை, விடுவோனே-விடுத்தருளியவரே! மரகத ஆகார ஆயனும் - மரகதம் போன்ற பச்சைநிறமுள்ள திருவுருவமுடைய ஆயர்குலக் கொழுந்தாகிய திருமாலும், இரணியஆகார வேதனும்-பொன்னிற முள்ள திருவுருவுடைய பிரம்மதேவனும், வசுஎனும் ஆகார ஈசனும்-நெருப்பு வண்ணமுள்ள திருவுருவுடைய உருத்திரமூர்த்தியும், அடிபேண-திருவடியை விரும்ப, மயில் உறை வாழ்வே-மயில்வாகனத்தில் எழுந்தருளி வருகின்ற இறையவரே! விநாயக மமலை உறைவேலா- விநாயகமலை என்ற திருத்தலத்தில் வாழ்கின்ற வேலாயுதக் கடவுளே! மகீதர-மலைகளோடு கூடிய, வனசரர் ஆதாரமாகிய பெருமாளே-காட்டிலே வாழ்கின்றவேடர்களுக்கு ஆதாரமாகிய பெருமையின் மிக்கவரே! சரவண ஜாதா-நாணல்வனஞ் சூழ்ந்த பொய்க்கையில் தோன்றியவரே! நமோ நம-போற்றிபோற்றி; கருணை அதீதா-கருணை தோன்றியவரே! நமோ நம-போற்றி போற்றி;கருணை அதீதா-கருணை நிறைந்து கடந்த பெருமாளே, நமோநம-போற்றிபோற்றி; சததள பாதா-நூறு இதழ்களோடு கூடிய தாமரை போன்ற திருவடியையுடையவரே! நமோ நம-போற்றி போற்றி; அபிராம-மிக்க பேரழகுடையவரேதருண அக தீரா-இளமையுடன் தைரியத்தை யுடையவரே! நமோநம-போற்றிபோற்றி; நிருப அமர்வீரா-தலைமை தங்கிய வீரரே! நமோநம-போற்றி போற்றி;சமதள ஊரா-போருக்குரிய சேனைகளுடன் கூடிய ஊராகிய போரூரில்வாழ்பவரே! நமோநம-போற்றி போற்றி; சகதீச-உலகங்களுக்குத் தலைவரே!பரம சொரூப-உயர்ந்த ஞானவடிவு உடையவரே! நமோநம போற்றி போற்றி;சுரர்பதி பூபா-இமையவர் கோமானாகிய இந்திரனுக்குத் தலைவரே! நமோ நம-போற்றி போற்றி; பரிமள நீபா-வாசனை தங்கிய கடப்பமலர் மாலையையணிபவனே! நமோநம-போற்றி போற்றி; உமை காளி பகவதி பாலா-உமைஎன்னும் திருப்பெயரையுடையவரும், கருமை நிறத்தோடு கூடியவரும், ஆறுஅருட்குணங்களை யுடையவருமாகிய அம்பிகையின் அருட்புதல்வரே!நமோநம-போற்றி போற்றி; இகபரமூலா-இம்மைமறுமை என்ற இரண்டு சுகமும்அருளுவதற்கு மூலகாரணரே! நமோநம-போற்றி போற்றி; பவுருஷ சீலா-ஆண்மையுடன் கூடிய ஒழுக்கமுடையவரே! நமோநம-போற்றி போற்றி;அருள்தாராய்-தேவரீருடைய திருவளைத் தந்தருள்வீர். |