மாகசஞ் சாரமுகில் தோற்ற குழல்கொடு போகஇந்த் ராதிசிலை தோற்ற நுகல்கொடு மானவண்டேறுகணை தோற்ற விழிகொடு கண்டுபோல மாலர்கொண்ட டாடுகனி தோற்ற இதழ்கொடு சேலைசென் நூதுகுயில் தோற்ற இசைகொடு வார்பொரும் பாரமலை தோற்ற முலைகொடு மன்றுளாடி சீகரம் பேணுதுடி தோற்ற இடைகொடு போகபண் டாரபணி தோற்ற அரைகொடு தேனுகுஞ் சீர்கதலி தோற்ற தொடைகொடு வந்துகாக தேடுகின்ற றாரொடு மெய் தூர்த்த னெனவுற வாடுகின் றேனைமல நீக்கி யொளிதரு சீவனொன் றானபர மார்த்த தெரிசனை வந்துதாராய் வேகமுண் டாகியுமை சாற்று மளவினில் மாமகங் கூருமது தீர்க்க வடிவுடை வீனென் பானொருப ராக்ர னெனவர அன்றுசோமன் மேனியுந் தேயகதிர் தோற்ற எயிறுக ஆனுகுந் தீகையற சேட்ட விதிதலை வீழநன் பாரதியு மூக்கு நழுவிட
வந்தமாயன் ஏகநின் றாகியமர் தோற்று வதறிட வேகவுங் காரமொடு ஆர்க்க அலகைக ளேறிவென் றாடுகள நீக்கி முனிவரர் வந்துசேயென் றீசநண் பானபுரு ஷார்த்த தெரிசனை தாவெனுங் கேள்விநெறி கீர்த்தி மருவிய ராஜகம் பீரவள நாட்டு மலைவளர் தம்பிரானே. பதவுரை வேகம் உண்டாகி-கோபம் தோன்றி, உமை சாற்றும் அளவில்-உமாதேவியார் சொன்னவுடன், மாமகம் கூரும் அது தீர்க்க-தக்கனுடைய பெரிய யாகம் மிகுதியாக நடப்பதை அழிக்கும் பொருட்டு, வடிவு உடை வீரன் என்பான்- அழகுடைய வீரபத்ரன் என்ற, ஒரு பராக்ரன் எனவர-ஒப்பற்ற பேராற்றலுடையவர் தோன்றிவர, அன்று-அந்நாளில், சோமன்-சந்திரன், மேனியும் தேய-உடம்புந் தேயவும், கதிர்தோற்ற எயிது உக-சூரியனுக்கு உள்ள பற்கள் உதிரவும், ஆன் உகும் தீகை அற-பசுவின் |