பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 201

 

உறுப்புகள் சிந்தும் அக்கினியின் கையறவும், கேட்ட விதி தலை வீழ- முதன்மையான தக்கனுடைய தலை அற்று விழவும், நன் பாரதியும் மூக்கு நழுவிட-நல்ல சரச்சுவதியின் மூக்கு அறுபட்டு நழுவி விழவும், வந்த மாயன் ஏக-அங்கு வந்த திருமால் ஓட்டம் பிடிக்கவும், நின்று ஆகி அமர் தோற்று வதறிட-அந்த யாகசாலையில் நின்ற துணைபுரிந்த மற்றவர்கள் தோல்வியுற்றுப் பதறவும், வேக உங்காரமொடு ஆர்க்க-கோபத்தால் ஊங்காரஞ் செய்து ஆரவாரஞ் செய்ய, அலகைகள் ஏறி வென்று ஆடகளம் நீக்கி-பேய்க் கூட்டங்கள் கூடி வென்று ஆடிய அந்தச்சாலையை விட்டு யாவரையும் நீங்கும்படியும் புரிந்த சிவபெருமானும், முனிவரர்-தலைவரே! என்றும் போற்றி, அன்பு ஆன புருஷார்த்த தரிசனதைா எனும்-அன்பின் வழியான அறம் பொருள் இன்பம் வீடு என்ற உறுதிப் பொருள்கள் நான்கின் விளக்கக் காட்சியைத் தந்தருளுக என்று வேண்டிய, கேள்வி நெறி கீர்த்தி மருவி- வேள்வி நெறியின் புகழ் அமைந்த, ராஜகெம்பீர வள நாட்டு மலைவளர்- ராஜகெம்பீர வளநாட்டு மலையின் மீது எழுநத்ருளியுள்ள, பெருமாளே- பெருமையிற் சிறந்தவரே! மாகசஞ்சாரமுகில்-ஆகாயத்தில் உலாவுகின்ற மேகத்தை, தோற்ற குால் கொடு-தோல்வியடையச் செய்த கூந்தல் கொண்டும், போக இந்திர ஆதிசிலை-போகங்களை நுகர்கின்ற இந்திர வில்லை, தோற்ற முதல் கொடு-தோல்வி அடையச் செய்த நெற்றி கொண்டும், மான வண்டு ஏறு- பெருமையுடைய வண்டுகள் சேர்கின்ற, கணை தோற்ற வழி கொடு- (மன்மதனுடைய) மலர்க்கணைகளைத் தோல்வியடையச் செய்த கண்கள் கொண்டும், கண்டுபோல்-கற்கண்டுபோல் இனிக்கின்றதென்று, மாலர் கொண்டாடு-காம மயக்கங் கொண்டவர்கள் கொண்டாடுகின்ற, கனி-இதழ் கொண்டும், சோலை சென்று ஊது குயில்-சோலையிற் கென்று ஒலிக்கின்ற குறிலை, தோற்ற இசை கொடு-தோல்வியடையச் செய்த இசையைக் கொண்டும், வார் பொரும்-கச்சுடன் போர் புரிகின்ற, பாரமலை தோற்ற-பெரிய மலையைத் தோல்வியடைச் செய்த, முலை கொடு-தனங்கள் கொண்டும், மன்று உள் ஆடி- தில்லைக் கனக சபையில் நடனம் புரிகின்ற சிவபெருமானுடைய, சீகரம் பேணுதுடி-திருக்கரத்தில் விரும்பி வைத்துள்ள உடுக்கையை, தோற்ற இடை கொடு-தோல்வியடையச் செய்த இடை கொண்டும், போக பண்டார-காம போகத்துக்குக் கருவூலமாகிய, பணி தோற்ற அரைகொடு-பாம்பைத் தோல்வியுறச் செய்த அல்குல் கொண்டும், தேன் உகும் சீர்கதலி-தேன் சொட்டும் சிறப்புடைய வாழையை, தோய்ய தொடை கொடு-தோல்வியடையச் செய்த தொடை கொண்டும், வந்து காசு தேடுகின்றரொடு-வெளியேவந்து காசு தேடி நிறகும் வேசையருடன் மெய் தூர்த்தன் என-உடல் கொண்ட பொல்லாதவன் என்று, உறவு