ஆடுகின்றேனே-உறவு செய்கின்ற அடியேனுடைய, மலம் நீக்கி-ஆணவ மலத்தையகற்றி, ஒளிதரு சீவன் ஒன்று ஆன - ஒளி வீசுகின்ற உயிருடன் ஒன்றுபட்டதான, பரமார்த்த தரிசனை-பரம்பொருள் விளக்கக் காட்சியை, வந்து தாராய்-அடியேன் முன் வந்து தந்தருளுவீராக. பொழிப்புரை உமாதேவியார், கோபம் தோன்றிக் கூறியவுடன், தக்கனுடைய பெரிய மகம் மிகுதியாக நடப்பதை அழிக்கும் பொருட்டு, அழகிய வீரபத்திரர் ஒப்பற்ற ஆற்றலுடன் தோன்றிவர, அந்நாள் சந்திரன் தேயவும், சூரியனுடைய பல் உதிரவும், பசுவினா உறுப்புகள் சிந்தும் அக்கினியின் கையறவும், தலைவனான தக்கனுடைய தலை நழுவி விழவும் சரஸ்வதியின் மூக்கு நழுவி விழவும் அங்கு வந்த திருமால் அஞ்சி ஓடவும், அந்த யாக சாலையில் நின்று, மற்றவர்கள் பதறவும், கோப ஊங்காரஞ் செய்தும், பேய்க் கூட்டங்கள் கூடி வென்று ஆடிய அந்த சாலையை விட்டுவிலக்கிய சிவமூாத்தியும்! முனிவர்களும் வந்து “சேயே! தலைவனே!” என்று போற்றி, அன்பின் வழி புருஷார்த்தங்கள் நான்கும் விளங்கக் காட்சியைத் தந்தருளுக என்றுவேண்டிய கேள்வி நெறியின் புகழ் அமைந்த ராஜகெம்பீர வளநாட்டு மலையில் விளங்கும் பெருமித முடையவரே! ஆகாயத்தில் உலாவுகின்ற மேகத்தைத் தோல்வியடையச் செய்த கூந்தல் கொண்டும், போகங்களை நுகர்கின்ற இந்திரனுடைய வாளவில்லைத் தோல்வியடையச் செய்த நெற்றி கொண்டும், பெருமையுடைய வண்டுகள் மொய்க்கின்ற மன்மதனுடைய மலர்க்கணைகளைத் தோல்வி யடையச் செய்த கண்கள் கொண்டும், கற்கண்டுபோல் இனிக்கின்ற தென்று, காம மயக்கம் கொண்டவர்கள் கொண்டாடுகின்ற கொவ்வைக் கனியைத் தோல்வியடையச் செய்த வாயிதழ் கொண்டும், சோலையில் கூவும் குயிலைத் தோல்வியடையச் செய்த இன்னிசை கொண்டும், கச்சைக் கிழிப்பதும் பெரிய மலையைத் தோல்வியடையச் செய்வதுமாகிய தனங்கள் கொண்டும்; அம்பலத்தில் ஆடுகின்ற அரனாருடைய திருக்கரத்தில் விரும்பி வைத்துள்ள உடுக்கையைத் தோல்வியடையச் செய்த இடை கொண்டும், காம போகத்தின் கருவூலமான பாம்பின் படத்தைத் தோல்வியடையச் செய்த அல்குல் கொண்டும், தேன் சொட்டும், சிறந்த வாழை மரத்தைத் தோல்வியடையச் செய்த தொடை கொண்டும், வெளியே வந்து காசு தேடுகின்ற பொது மகளிருடன் இணங்குகின்ற அடியேனுடைய மலமாசினை நீக்கி ஒளியுடைய |