பக்கம் எண் :


204 திருப்புகழ் விரிவுரை

 

மிக்கவிதா தாவினொடும்விதிவழியே தண்டித்த விமலர்”
                                          - திருஞானசம்பந்தர்

“தக்கனையு மெச்சனையுந் தலையறுத்துத் தேவர் கணந்
   தொக்கனவந்தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடி”
                                                          திருவாசகம்

“மன்னான தக்கனை முன்னாள் முடித்தலை‘
   வன்வாளியிற் கொளுந் தங்கரூபன்”- (என்னால்) திருப்புகழ்

புருஷார்த்த தெரிசனை தாவெனுங்கேள்வி நெறி கீர்த்தி மருவிய:-

அறம் பொருள்இன்பம் வீடு என்ற இந்த நான்கும் ஆன்மாக்கள்மேற் கொள்ளும் உறுதிப் பொருள்கள். இதன் நுட்ப திட்பங்களை ஆராய்வதும், பெறுவதும், பெற்றதனால் பெரும் புகழும் மருவிய நாடு ராஜகெம்பீர வளநாடு.

கருத்துரை

இராஜகெம்பீர வளநாட்டு மலை மேவு முருகா! சீவன் சிவனாகும் திருவினைத் தருவாய்.

ஞானமலை

165

சூதுகொலை கார ராசைபண மாதர்
தூவையர்கள் சோகை           முகநீலர்
சூலைவலி வாத மோடளைவர் பாவர்
தூமையர்கள் கோளர்           தெருவூடே
சாதனைகள் பேசி வாருமென நாழி
தாழிவிலை கூறி                தெனவோதி
சாயவெகு மாய தூளியுற வாக
தாடியிடு வோர்க               ளுறவாமோ
வேதமுனி வோர்கள் பாலகர்கள் மாதர்
வேதியர்கள் பூச                  லெனஏகி
வீறசுரர் பாறி வீழஅலை யேழு
வேலையள றாக                 விடும்வேலா
நாதரிட மேவு மாதுசிவ காமி
நாரியமி ராமி                    யருள்பாலா
நாராண சுவாமி யீனுமக ளோடு
ஞானமலை மேவு                 பெருமாளே.