பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 205

 

பதவுரை

வேத முனிவோர்கள்-வேதத்தில் வல்ல முனிவர்கள், பாலகர்கள்- குழந்தைகள், மாதர்-பெண்கள், வேதியர்-அந்தணர்கள் ஆகிய இவர்களை, பூசல் என ஏகி-போர் நடக்கப் போகின்றதென்று அப்புறப்படுத்தி விட்டு, வீறு அசுரர்-மிகுதியாக வந்த அசுரர்கள், பாறி விழ-அழிந்து விழவும், அலை ஏழு வேலை அளறு ஆக-கடல் சேறாகுமாறும், விடும் வேலா-செலுத்திய வேலாவுதரே! இடம் மேவும்-சிவபெருமானுடைய இடப்பாகத்தில் உள்ள, மாது சிவகாமி-அழகிய சிவகாமி, நாரி-பெண்மணி, அபிராமி-பேரழகுடையவள் ஆகிய உமாதேவியார், அருள் பாலா-பெற்ற பாலகரே! நாராயண சுவாமி ஈனும்-நாராயணமூர்த்தி பெற்ற மகளோடு-புதல்வியுடன், ஞானமலை மேவு- ஞானமலையில் எழுந்தருளியுள்ள, பெருமாளே-பெருமையிற் மிக்கவரே! சூது கொலைகாரர்-வஞ்சனையும் கொலையுஞ் செய்பவர்கள்-பண ஆசை மாதர்- பணத்தாசை கொண்ட பெண்கள், தூவையர்கள்-புலால் உண்பவர்கள், சோதை முக-சோசை நோயால் உதிரங் குறைந்து வெளுத்த முகத்தையுடையவர்கள், நீலர்-வீஷமிகள், சூலை-சூலை நோய், வலி-வலிப்பு, வாதஅதாடு அனைவர்- வாதம் முதலிய நோய்களுடன் தொடர்பு கொள்பவர்கள், பாவர்-பாவிகள், தூமையவர்கள்-சூதகத்தில் பரிசுத்தம் இல்லாதவர்கள், கோளர்-கோள் சொல்லுபவர்கள், தெரு ஊடே-நடுத் தெருவில் நின்று, சானைகள் பேசி - காரியத்தைச் சாதிக்கும் பேச்சுக்களைப் பேசி, வரும் என-வாருங்கள் என்று அழைத்துக் கொண்டு போய், நாழி தாழீ விலைகூறு இது என ஓதி-ஒரு நாழிகைக்கு (இந்த) உடலான பாண்டத்திற் விலை இவ்வளவு என்று சொல்லி, சாய-வந்தவர்கள் தம் பக்கத்தில் சாயும்படி, வெகு மாய தூளி உற-மிகுதியாக மாயப் பொடியை அவர்கள் மீது தூவி, ஆக தாடி இடு வோர்கள்-சரீரத்தைத் தட்டி கொடுப்பவர்களாகிய வேசையரது, உறவு ஆமோ-நட்பு ஆகுமோ (ஆகாது).

பொழிப்புரை

வேதத்தில் வல்ல முனிவர்கள், குழந்தைகள், பெண்கள், வேதியர்கள், இவர்களைப் போர் நடக்கப் போகின்றதென்று அப்புறப்படுத்தி, மிகுதியாக வந்த அசுரர்கள் அழிந்து விழவும், கடல் சேறாகவும் வேலாயுதத்தை விடுத்தவரே! சிவபெருமழனுடைய இடப்பாகத்தில் எழுந்தருளிய அழகிய சிவகாமி, பெண்மணி, பேரழகுடையவள் ஆகிய பார்வதியம்மை பெற்ற குமாரரே! நாராயணமூர்த்தி பெற்ற புதல்வியுடன் ஞானமலை மீது வீற்றிருக்கின்ற பெருமிதமுடையவரே! வஞ்சனையும் சூதும் புரிபவர்கள், பணத்தாசையுடையவர்கள், மாமிசபட்சணிகள்,