பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 207

 

தாழி-பாண்டம். இந்த உடம்பாகிய பாண்டம் ஒரு நாழிகைக்கு இவ்வளவு விலையென்று கூறி பொருளைப் பறிப்பார்கள்.

சாய வெகுமாய தூளியுற:-

தம்பால் வந்த ஆடவர்கள் தம் மீது சாயும்படி சொக்குப்பொடி தூவி வசப்படுத்துவார்கள்.

ஆகதாடி யிடுவோர்கள்:-

சரீரத்தைத் தட்டிக்கொடுப்போர். இது ஒரு சாகசம். மெல்ல முதுகைத் தட்டுவது போன்ற வித்தை.

வேத முநிவோர்கள் பாலகர் மாதர் வேதியர்கள் பூசலென ஏகி:-

ஏகி-ஏகுவித்து. போர் தொடங்குமுன் அந்தணர்கள், மாதர்கள், பாலகர்கள், நோயாளிகள் ஆகிய இவர்களைப் பாதுகாவலான இடத்துக்குப் போகுமாறு பறையறைவார்கள். இது பழங்காலத்து அறம்.

“தாபதர் நோயோர் பெண்டிரும் நும்மரண்
   ஏகுதிர்பெட்டென்று.........................பறை சாற்றி காஞ்சிப்புராணம்
“ஆவம் ஆனியற்பார்ப்பன மக்களும்
   பெண்டிரும்பிணியுடை யீரும் பேணித்
   தென்புல வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும்
   பொன்போல்புதல்வர்ப் பெறாஅ திரும்
   எம் அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்”   - புறநாநூறு (9)

கருத்துரை

ஞானமலை முருகா! மாதர் உறவு ஆகாது.

166

மனையவள் நகைக்க வூரி னனைவரு நகைக்க லோக
மகளிரு நகைக்க தாதை தமரோடும்
மனமது சலிப்ப நாய னுளமது சலிப்ப யாரும்
வசைமொழி பிதற்றி நாளு மடியேனை
அனைவரு மிழிப்ப நாடு மனவிருண் மிகுத்து நாடி
னகமதை யெடுத்த சேம மிதுவோவென்
றடியனு நினைத்து நாளு முடலுயிர் விடுத்தபோது
மணுகிழ னளித்த பாத மருள்வாயே
தனதன தனத்த தான எனமுர சொலிப்ப வீணை
தமருக மறைக்கு ழாமு மலைமோதத்
தடிநிக ராயிற்க டாவி யசுரர்க ளிறக்கு மாறு
சமரிடை விடுத்த சோதி முருகோனே