எனைமன முருக்கி யோக அநுபூதி யளித்த பாத எழுதரிய பச்சை மேனி யுமைபாலா இயைவர்துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக இலகிய சசிப்பெண் மேவு பெருமாளே. பதவுரை தனதன தனத்த தான என-தனதன தனத்த தான என்ற ஒலியுடன், முரசு ஒலிப்ப-முரசு என்ற வாத்திய ஒலிக்கவும், வீணை-வீணை, தமருகம்-உடுக்கை, மறை குழாமும்-வேதங்களின் கூட்டம் ஆகிய இவையும், அலைமோத-அலை மோதுவது போல் ஒலி செய்யவும், தடி நிகர் அயில் கடாவி-மின்னல் போல் ஒளிவிடும் வேலாயுதத்தை செலுத்தி, அசுரர்கள் இறக்குமாறு-அசுரர்கள் மாளும்படி, சமரிடை விடுத்த-போர்க்களத்தில் விடுத்தருளிய, சோதி முருகோனே-ஒளி மயமான முருகக்கடவுளே! எனை மனம் உருக்கி- அடியேனுடைய மனத்தை உருக்கி, யோக அநுபூதி அளித்த பாத-யோக அநுபூதியை வழங்கிய திருவடியை யுடையவரே! எழுத அரிய பச்சைமேனி- எழுதுவதற்கு அரிய பச்சை மேனியையுடைய, உமை பாலா-உமாதேவியின் திருக்குமாரரே! இமையவர் துதிப்ப-தேவர்கள் துதி செய்ய, ஞானமலை உறை- ஞானமலையில் வீற்றிருக்கும், குறத்தி பாக-வள்ளியம்மையைப் பக்கத்தில் உடையவரே!இலகிய சசி பெண் சேவு-விளங்குகின்ற இந்திராணியின் மகளாகிய தேவயானை விரும்புகின்ற, பெருமாளே-பெருமையில் மிகுந்தவரே! மனையவள் நகைக்க-மனைவி நகைக்கவும், ஊரின் அனைவரும் நகைக்க-ஊரில் உள்ள யாவரும் நகை செய்யவும், லோக மகளிரும் நகைக்க-உலக மாதர்கள் சிரிக்கவும், தாதை தமரோடும்-தந்தையும் சுற்றத்தாரும், மனம் அது சலிப்ப- உள்ளம் வெறுப்படையவும், நாயன் உளம் அது சலிப்ப-அடியேனும் உள்ளம் வெறுப்படையவும், யாரும் வசைமொழி பிதற்றி-நாள் தோறும் அடியேனை அனைவரும் இழிப்ப-நாள்தோறும் அடியேனை எல்லாரும் இகழவும், நாடும் மன இருள் மிகுந்து-எண்ணமிடும் மனத்தில் இருள் மிகுந்து, நாடின் அகம் அதை எடுத்த சேமம் இதுவோ என்று-ஆராய்ந்து பார்த்தால் நான் இந்த உடம்பை எடுத்த இன்பம் இதுதானோ! என்று அடியேனும் நினைத்து- அடியேனும் நினைத்து, நாளும்-நாள்தோறும் இதனை நினைத்து, உடல் உயிர் விடுத்த போதும்-உடலினின்றும் உயிரைவிடத் துணிந்த சமயத்தில், அணுகி முன் அளித்த பாதம் அருள்வாயே-அடியேனிடம் வந்து முன் அருளிய திருவடியைத் தந்து அருளுவீராக. பொழிப்புரை தனதன தனத்த தான என்று முரசு வாத்தியம் ஒலிக்கவும், வீணை, உடுக்கை, வேதங்களின் கூட்டம் ஆகிய இவை கடலின் |