அலைபோல் ஒலிக்கவும், போரில் அசுரர்கள் இதற்கு மாறும், மின்னல் போல் ஒளி செய்யவும் வேலாயுதத்தை விடுத்தருளிய சோதி முருகரே! அடியேனுடைய மனத்தை உருக்கியோக அநுபூதியைத் தந்த திருவடிகளை யுடையவரே! எழுதுதற்கு அரிய பச்சை மேனியையுடைய உமையம்மையின் பாலகரே! தேவர்கள் துதிக்க, வள்ளியம்மையுடன் ஞானமலையில் வாழ்பவரே! இந்திராணியின் புதல்வியாகிய தேவயானை விரும்புகின்ற பெருமிதம் உடையவரே! மனைவி நகைக்கவும், ஊரவர் யாவரும், நகைக்கவும், சுற்றத்தாருடன், தந்தை மனம் சலிக்கவும், அடியேனுடைய உள்ளம் வெறுக்கவும், நாள்தோறும் அடியேனை இகழ்ந்து எல்லோரும் வசைமொழி கூறி இகழவும், எண்ணுகின்ற மனத்தில் இருள் மிகுதியாகவும், இவற்றை எண்ணி அடியேன் இந்த உடம்பை யெடுத்ததன் பயன் இதுவோ என்று எண்ணி, உடலிலிருந்து உயிரை விடத்துணிந்தபோது, அடியேன் முன் தோன்றி முன்னே அருளிய திருவடியைத் தந்தருளுவீராக. விரிவுரை இத்திருப்புகழ் அருணகிரியாருடைய வரலாற்றின் தொடர்புடையது. முதற்பகுதியில்தன்னை உலகம் பழித்தனால் அவர் உயிர் விடத்துணிந்தபோது, முருகவேள் அவர் முன் தோன்றி திருவடியருளிய அருள் திறத்தைக் கூறுகின்றனர். ஏழாவது அடியிலும் தனக்கு அருளிய அநுபூதியை யுரைக்கின்றார். மனையவள் நகைக்க:- அருணகிரிநாதர் இளமையில் பொது மகளிரது உறவு பூண்டு ஒழுகியதனால் மனைவி அவரைக் கண்டு நகைக்கலானாள். இதனால் அருணகிரி நாதருக்கு மனைவியிருந்ததாகத் தெரிகின்றது. ஊரினனைவரும் நகைக்க லோக மகளிரு நகைக்க:- திருவண்ணாமலையில் வாழ்ந்த மாந்தர்களும், உலகிலுள்ள மாதர்களும் எள்ளி நகையாடினார்கள். அகமதை எடுத்த சேமம் இதுவோவென்றடியனும் நினைத்து நாளும் உடலுயிர் விடுத்தபோது:- எல்லோரும் பழித்து இழித்து உரைத்த படியால், அருணகிரிநாதருடைய மனம் நொந்தது. அதனால் அவர் “நாம் பிறந்த பயன் இதுவோ?” என்று கருதி உள்ளம் உடைந்து திருவருளைத் கோபுரத்தின் உச்சியிலேறி வீழ்ந்தனர். அப்போது |