யழகைப் பாடுவதனால் அறிவற்றவன். விதரண நாதான் இலாத பாவி:- விதரணம்-விவேகம். உயர்ந்த தமிழால்இழிந்த பொருள்களைப் பாடுவதனால் அறிவற்ற நாவையுடையவன். நாக்கு இவைன் தந்தது உடம்பில் எல்லாப்பகுதியிலும் நரம்புகள் உண்டு. நாக்கை மட்டும் இறைவன் நரம்பின்றிப் படைத்தான். ஏன்? நரம்புள்ள பகுதிகள் சுளுக்கிக் கொள்ளும். கழுத்து சுளுக்கும்; கை சுளுக்கும்; கால் சுளுக்கும். நாக்குக்கு நரம்பிருந்தால் சுளுக்கிவிடும். பேசமுடியாத அவல நிலை அடிக்கடி வரும். பேச்சுத் தடைபட்டுப் போகும். அதனால், இறைவன் கருணையோடு பேசுங் கருவியாகிய நாவை நரம்பின்றிப் படைத்தருளினார். அப்பரமன் தந்த நாவால் அவனையே இல்லையென்று கூறுவது எத்துணைப் பேதமை? சிந்தியுங்கள். அவன் தந்த நாவால் அவனை வாழ்த்தவேண்டும். “வார்கழல் வாய் வாழ்த்தவைத்து” - திருவாசகம் “நாக்கைக் கொண்டரன்நாமம் நவில்கிலர்" - அப்பர் இறைவனுடைய திருநாமங்களைச் சொல்லாத நாக்கு என்ன நாக்கு என்ற வடலூர் வள்ளலார் பாடுகின்றார். அநிஜவன்:- நிஜம்-மெய்; அநிஜவன்-உண்மை இல்லாதவன். அகரம் இன்மைப் பொருளில் வந்தது. நியாயம் இல்லாதது அநியாயம். அதுபோல் நிஜம் இல்லாதது அநிஜம். வீணாள்படாத போத தவமிலி:- அறிவு-வீணாள்படாமல் தடுக்கும். தவத்தைக் கொடுக்கும். ஆதலால் அறிவும் தவமும் இல்லாதவன் என்றார். பசுபாச வ்யாபார மூடன்:- பசு-உயிர். பாசம்உலகம். உயிரின்மீது பற்று வைத்தும், உலகப் பொருள்களின்மீது பற்று வைத்தும், அவற்றுக்காகப் பாடுபட்டுத் திரிகின்வன். சீர்பாத தூளியாகி:- இந்தசொல் மிக உயர்ந்த சொல். நாம் இறைவனுடைய சீர்பாத தூளியாக ஆகவேண்டும். ஆக மிக உயர்ந்த சொல். அடியார்களின் அடிப்பொடியாக ஓர் ஆழ்வார் விளங்கினார். தொண்டடிரடிப் பொடியாழ்வார். |