பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 211

 

பொழிப்புரை

இகத்துக்கும்பரத்துக்கும் தலைவரே! இயல் இசை நாடகம் என்ற முத்தமிழுக்கும் உரியவரே! பூதலத்தில் புகழ் பெற்ற சென்னி மலையில் வாழும் செவ்வேளே! சரவணபவப் பரம்பொருளே! பெருமிதம் உடையவரே! நினைப்பு மறப்பு என்ற வகையில் தடுமாறாமல், முருகனே குருவென்று தெளிகின்ற ஞான ரகசியத்தை உபதேசித்து அநுபூதிப் பேரின்ப நிலையைத் தந்தருளுவீராக.

விரிவுரை

பகலிரவு:-

பகல் - நினைவு (சகலம்) இரவு-மறப்பு (கேவலம்)

“அந்திபகல்அற்ற நினைவருள்வாயே” - (ஐங்கரனை) திருப்புகழ்.

பதிகுரு வெனத் தெளி போத ரகசியம்:-

முருகனே குரு என்று தெளிகின்ற ஞானம்.

“முருகன் தனிவேல் முனிநங் குருவென்
   றருள்கொண்டறியார் அறியுந்தரமோ”     -அநுபூதி

அநுபூதி ரதம்:-

இரதம்-இனிமை, அநுபூதி-ஒன்றுபடுதல், முருகனுடன் ஒன்றுபட்டு அதனால் வருகின்ற பேரின்ப நிலை.

இகபரமதற் கிளையோனே:-

இகத்துக்கும்பரத்துக்கும் முருகனே தலைவன். அடியார்க்கு அவற்றை எளிதில் வழங்க வல்லவனும் அப்பரமேன.

“இகபர சௌபாக்ய மருள்வாயே”             - (வசன) திருப்புகழ்.

இயலிசையின் முத்தமிழோனே:-

இனம் பற்றி நாடகத்தமிழும் வருவிக்கப்பட்டு முத்தமிழாயின. இயல் இசை நாடகம். இம்மூன்று தமிழுக்கும் உரியவர் முருகவேளே.

சிரகிரி

சிரகிரி-சென்னிமலை. இது முருகனுக்குரிய அருமையான திருத்தலம். ஒரு கற்பத்தில் ஆதிசேடனுக்கும் வாயு தேவனுக்கும் வலிமை விஷயமாக விவாதம் நடந்தது. அப்பொழுது ஆதிசேடன் தனது ஆயிரம் பணா மகுடங்களால் மேருமலையை மூடினான். வாயுதேவன் பேராற்றலுடன் வீசி, மேருமலையின் சிகரங்களில் மூன்றைப் பறித்து எறிந்தான். அவற்றில் ஒன்று திருச்செங்கோடு. மற்றொன்று கொடுமுடி. இன்னும் ஒன்று சென்னிமலை. இது