பக்கம் எண் :


212 திருப்புகழ் விரிவுரை

 

பூந்துறை நாட்டில் விளங்குவது. ஈரோடுக்கு அப்பால் உள்ள ஈங்கூர் என்ற புகைவண்டி நிலையத்திற்கு அருகில் உள்ள அரிய திருத்தலம். ஈரோடிலிருந்து பஸ் வசதி உண்டு. மலைமீது கார் போகப் பாதையுள்ளது. சுவாமி மிக்க வரதர். சித்தர்கள் பலர் தவஞ்செய்த இடம்.

கருத்துரை

சென்னிமலை மேவும் செம்மலே! அநுபூதி ஞான இன்பத்தைத் தந்தருள்வீர்.

ஊதிமலை

168

ஆதிமக மாயியம்பை தேவிசிவ னார்மகிழ்ந்த
ஆவுடைய மாதுதந்த             குமரேசா
ஆதரவ தாய்வருந்தி யாதியரு ணேசரென்று
ஆளுமுனை யேவணங்க        அருள்வாயே
பூதமது வானவைந்து பேதமிட வேயலைந்து
பூரணசி வாகமங்க               ளறியாதே
பூணுமுலை மாதர்தங்கள் ஆசைவகை யேநினைந்து
போகமுற வேவிரும்பு              மடியேனே
நீதயவ தாயிரங்கி நேசவரு ளேபுரிந்து
நீதிநெறி யேவிளங்க               வுபதேச
நேர்மைசிவ னார்திகழ்ந்த காதிலுரை வேதமந்த்ர
நீலமயி லேறிவந்த                வடிவேலா
ஓதுமறை யாகமஞ்சொல் யோகமது வேபுரிந்து
ஊழியுணர்வார்கள்தங்கள்        வினைதீர
ஊனுமுயி ராய்வளர்ந்து ஓசையுடன் வாழ்வுதந்த
ஊதிமலை மீதுகந்த                 பெருமாளே.

பதவுரை

ஆதிமகமாயி-முதன்மைபெற்ற பெரிய மாயியாக விளங்குபவரும், அம்மை- அம்பிகையும், தேவி-ஒளிபெற்றவரும், சிவனார் மகிழ்ந்த ஆவுடைய மாது- சிவபெருமான் மகிழ்கின்ற ஆவுடையாள் என்னும் சிறப்பையுடையவளுமாகிய உமாதேவியார், தந்த-பெற்றருளிய, குமர ஈசா-திருக்குமாராகிய தலைவரே! பூதம் அது ஆன ஐந்து பேதம் இடவே