-பூதம் என்ற மண்நீர் தீ காற்று வான் என்ற ஐந்துவகையும் பேதமுற்று உடம்பாகி வர, அலைந்து-இவ்வுடம்பு கொண்டு அவமே யலைந்து, பூரண சிவ ஆகமங்களை அறியாது-நிறைவுடைய சிவாகமங்களை அறிந்து கொள்ளாமல், பூணும் முலை மாதர் தங்கள் ஆசை வகையே நினைந்து-ஆபரணங்களை யணியுந் தனங்களையுடைய பெண்களுடைய ஆசையையே நினைந்து, போகம் உறவே விரும்பும் அடியேனை-அவர்களுடன் போகத்தை நுகர்த்தற்கே விரும்புகின்ற அடியேனை, நீ தயவதாய் இரங்கி-தேவரீர் மிக்க கருணையுடன் இரக்கங்கொண்டு, நேச அருளே புரிந்து-நேசத்துடன் திருவருள் செய்து, நீதி நெறியே விளங்க-சைவ நீதியும் சன்மார்க்க வழியும் நன்கு விளங்குமாறு, உபதேச நேர்மை-உபதேசம் செய்த தன்மையானது, சிவனார் திகழ்ந்த காதில் உரை வேதமந்திரம்-சிவபெருமானுடைய திகழ்கின்ற திருச்செவியில் உரைத்த வேதமுதலாகிய மந்த்ரமேயாம், நீல மயில் ஏறிவந்த . (அங்ஙனம் அடியேனுக்கு உபதேசிக்கும் பொருட்டு) நீலமயில் மேல் ஆரோகணித்து வந்தருளிய, வடிவேலா-கூர்மைபொருந்திய வேலாயுதத்தை யுடையவரே! ஓதும் மறை ஆகமம் சொல்-ஓதப்பெறுகின்ற, வேதம் ஆகமம் என்ற பெருநூல்களால் பேசப்பெறுகின்ற, யோகம் அதுவே புரிந்து-சிவயோகத்தையே செய்து, ஊழி உணர்வார்கள் தங்கள் ஊழிகாலத்தையும் உணர்கின்ற அழிவற்ற ஆன்றோர்களுடைய, வினைதீர-வினைகள் நீங்குமாறு, ஊனும் உயிராய் வளர்ந்து-அவர்களுடைய ஊனாகியும் உயிராகியும் கலந்து வளர்ந்து, ஓசையுடன் வாழ்வுதந்த-பிரம நாதத்துடன் சிவஞானாநுபவப் பெருவாழ்வைத் தந்தருள்கின்ற, ஊதிமலை மீது உகந்த-ஊதிமலைமேல் உள்ளம் உவந்து வாழுகின்ற, பெருமாளே-பெருமையின் மிக்கவரே! ஆதரவது ஆய்வருந்தி- அன்புடன் பதியாகிய தேவரீரை யடையவேண்டுமென்று வருந்தி, ஆதி அருணேசர் என்று-முழுமுதலாகிய செம்பொருட்டலைவர் என்று துதித்து, ஆளும் உனையே வணங்க-ஆட்கொள்கின்ற தேவரீரை வணங்கி உய், அருள்வாயே-திருவருள்புரிவீர். பொழிப்புரை முதன்மை பெற்ற பெரிய மாயையாக விளங்குபவரும், அம்பிகையும், ஒளியையுடையவரும், சிவபெருமான் மகிழ்ந்த ஆவுடையாள் என்ற பீடஸ்தானமாக இலகுபவருமாகிய உமாதேவியாருடைய திருக்குமாரரே! ஐந்து பூதங்களின் மாறுபாட்டால் உண்டாகிய உடம்புடன் அலைந்து, அறிவு நிறைந்து சிவாகமங்களை அறிந்து கொள்ளாமல், ஆபரணங்களைப் பூண்டுள்ள தனபாரங்களையுடைய பெண்களுடைய ஆசையையே நாளும் நினைந்து அவர்களுடன் போகமுற விரும்புகின்ற அடியேனை ஆட்கொள்வதற்காக திருவுள்ளமிரங்கி அன்புடன் அருள் புரிந்து |