பூரண சிவாகமங்கள்:- எல்லாப் பொருள்களும் நிறைந்து ஞானவிளக்கமாய் விளங்குவது சிவாகமங்கள். ஆகமம் என்ற சொல்லுக்கு “வந்தது” என்பது பொருள். இறைவன் திருவாக்கினின்றும் வந்தது. காமிகம் முதலாக வாதுளாந்தமாக உள்ள சிறப்பு நூல்கள் யாவும் ஞானபாதமாம். உபதேசநேர்மை..............................வேதமந்த்ரம்:- குமாரபரமேஸ்வரர் சிவபெருமானுடைய திருச்செவியில் உபதேசித்தருளிய உபதேசப் பொருளையே அருணகிரியாருக்கும் உபதேசித்தருளினார். “நாதா குமார நமவென்றரனார் ஓதாயென ஓதிய தெப்பொருள் தான்?” அநுபூதி (36) “விசும்பின் புரத்ரய மெரித்த பெருமானும் நிருப குருபர குமர என்றென்று பக்திகொடு பரவ அருளிய மவுன மந்த்ரதனைப்பழைய நினதுவழி யடிமையும் விளங்கும் படிக்கினிது ணர்த்தி யருள்வாயே” - (அகரமுத) திருப்புகழ். நீலமயில்:- மயிலின் கழுத்து நீலநிறமுடைது. “நீலக்ரீவ ரத்னக்கலாப மயிலே” - மயில்விருத்தம். ஓதுமறை...............................ஊழியுணர்வார்:- சிவயோகம் புரியும் சிவஞானிகள் திருவிகற்ப சமாதியில் ஊழி ஒரு கணமாக அசைவற்றிருப்பர். ஊனுமுயிராய் வளர்ந்து:- இறைவன் எங்கணும் அத்துவிதமாகக் கலந்திருக்கின்றனன். கருத்துரை பார்வதி தேவியின் பாலரே! அடியேனுக்கு உபதேசித்த அருட்சுடரே! ஊதிமலை மேவிய இறையரே! தேவரீரையே வணங்க அருள் புரிவீர். கோதி மடித்துக்கனத்த கொண்டையர் சூது விதத்துக் கிதத்து மங்கையர் கூடிய அற்பச் சுகத்தை நெஞ்சினில் நினையாதே கோமை மனத்தைக் கெடுத்து வன்புல |