பக்கம் எண் :


216 திருப்புகழ் விரிவுரை

 

ஞான குணத்தைக் கொடுத்து நின்செயல்
கூறு மிடத்துக் கிதத்து நின்றருள்            புரிவாயே
நாத நிலைக்குட்கருத்து கந்தருள்
போத மற்றெச் சகத்தை யுந்தரு
நான்முக னுக்குக் கிளத்து தந்தையின்      மருகோனே
நாடு மகத்தெற்கிடுக்கண் வந்தது
தீரீடு தற்குப் பதத்தை யுந்தரு
நாயகர் புத்ரக் குருக்க ளென்றருள்          வடிவேலா
தோதிமி தித்தித் திமித்த விங்குகு
டீகுகு டிக்குட் டீகுக்கு டிண்டிமி
தோதிமி தித்தித் தனத்த தந்தவெ           னிசையோடே
சூழ நடித்துச்சடத்தில் நின்றுயி
ரான துறத்தற் கிரக்க முஞ்சுப
சோபன முய்க்கக் கருத்தும் வந்தருள்       புரிவோனே
ஓதவெழுத்துக்கடக்க முஞ்சிவ
காரண பத்தர்க் கீரக்க முந்தகு
ஓமெ னெழுத்துக் குயிர்ப்புமென்சுட         ரொளியோனே
ஓதியிணர்த்திக் குகைக்கி டுங்கன
காபர ணத்திற் பொருட் டயன்றரு
ஊதி கிரிக்குட் கருத்து கந்தருள்             பெருமாளே.

பதவுரை

நாத நிலைக்கு உள்-சிவ தத்துவத்தில், கருத்து உகந்து அருள்-கருத்து வரும்படி மகிழ்ந்து அருள்புரியும், போதக-ஞான குருவே! மற்று எ சகத்தையும் தரும்-சிவலோகந் தவிர மற்ற எல்லா வுலகங்களையும் படைக்கும், நான்முகனுக்கு-பிரமதேவருக்கு, கிளத்து-நல்லறங்களைக் கூறும், தந்தையின்- நாராயணருடைய, மருகோனே-திருமருகரே! நாடும் அகத்து எற்கு-தேவரீரையே நாடுகின்ற உள்ளமுடைய அடியேனுக்கு, இடுக்கண் வந்தது-துன்பம் நேர்ந்தது, தீரிடுதற்கு-அத்துன்பம் தீரும் பொருட்டு, பதத்தையும் தரும்-திருவடியைத் தந்தவரே! நாயகர் புத்ர குருக்கள் என்று அருள்-சிவபிரான் பிள்ளைக் குருவே என்று அன்புடன் அழைத்துருளிய, வடிவேலா-கூரிய வேலவரே! தோதிமி தித்தித் திமித்த டிங்குகு டீகுகு டிக்குட் டீகுக்கு டிண்டிடி தோதிமி தித்தித் தனத்த தந்த என் இசையோடே-தோதிமி தித்தித்................தனத்த தந்த என்று ஒலிக்கும் இசையுடன், சூழ நடித்து-அடியவர்கள் சூழ நடனம் புரிந்து, சடத்தில்