பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 217

 

நின்று உயிர் ஆன துறத்தற்கு-அடியேன் உடலினின்றும் உயிரைவிட முயன்றபோது, இரக்கமும்-அடியேன் மீது இரக்கமும், சுபசோபனம் உய்க்க கருத்தும்-அடியேனை சுப மங்கள வாழ்த்து நிலையில் சேர்ப்பிக்கத் திருவுள்ளமும் கூடி, வந்து அருள் புரிவோனே-என்முன் தோன்றி அருள்புரிந்தவரே! ஓத எழுத்துக்கு அடக்கமும்-ஓதப்படும் மந்திரங்கட்கு உட்பொருள் என்னும், சிவகாரண பத்தர்க்கு இரக்கமும்-சிவ சம்பந்தமான பத்தர்களிடத்தில் இரக்கமுள்ளவ னென்றும், தகு ஓம் என்னும் எழுத்துக்கு உயிர்ப்பும் என்-தகுந்த ஓங்கார எழுத்துக்கு உயிர்நாடி என்றும் சொல்ல நின்ற, சுடர் ஒளியோனே-பேரொளிப் பொருளே! ஓதியிணர்த்தி-ஒதிய மரம் பூத்து, குகைக்கு இடும்-குகையில் உதிர்க்கின்ற, கனக ஆபரணத்தின்-பொன்னாபரணம் போன்ற, பொருள் பயன்தரு-அரிய முத்திப் பயனைத் தருகின்ற, ஊதி கிரிக்கு உள்-ஊதிகிரி என்ற மலை மீது, கருத்து உகந்து அருள்-உள்ளம் மகிழ்ந்து வாழ்கின்ற, பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! கோதி முடித்து கனத்த கொண்டையர்-சிக்கு எடுத்து முடித்த பெரிய கூந்தலையுடையவர்கள், சூது விதத்துக்கு இதத்து மங்கையர்-வஞ்சனை வழிகளுக்கு நன்கு வழி செய்யும் பொது மகளிரை, கூடிய அற்ப சுகத்தை நெஞ்சினில் நினையாதே-கூடுவதால் வரும் அற்ப இன்பத்தை மனத்தில் நினையாமல், கோழை மனத்தை கெடுத்து- திடமில்லாத மனத்தை யொழித்து, வன்புல ஞான குணத்தை கொடுத்து-கூரிய மதியையும் ஞானத்தையும் கொண்ட குணத்தைத் தரப் பெற்று, நின் செயல் கூறும் இடத்துக்கு-உமது திருவிளையாடல்களைப் பேசும் இடங்களில், இதத்து நின்று-இன்பம் ஊற அடியேன் நிற்கும்படி, அருள்புரிவாயே- திருவருள்புரிவீராக.

பொழிப்புரை

சிவதத்துவத்தில் கருத்துவரும்படி மகிழ்ந்து அருள்புரியும் ஞானகுருவே! சிவலோகந் தவிர மற்ற எல்லாவுலகங்களையும் படைக்கும் பிரமனுக்கு அறிவுரைகள் கூறும் தந்தையாகிய நாராயணமூர்த்தியின் திருமருகரே! தேவரீரை நாடுகின்ற உள்ளமுடைய அடியேனுக்கு வந்த துன்பந் தீரும்படி திருவடியைத் தந்தவரே! சிவபெருமான் “புத்திர குருவே! என்று அழைத்தருளிய கூரிய வேலாயுதரே! தேதிமிதித்தித் திமித்த டிங்குகு டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி தோதிமி தித்தித் தனத்த தந்த என்ற ஒலிகள் அமைந்த இசையுடன், அடியார்கள் சூழ நடனஞ்செய்து, உடம்பினின்றும் உயிரைவிட அடியேன் துணிந்தபோது என்மீது, இரக்கமும், எனக்கு மங்கள நலன்கள் வாய்க்குமாறு திருவுள்ளமும் பற்றி, என்முன் வந்து அருள்புரிந்தவேர! ஒதப்படும் மந்திரங்களுக்கு உட்பொருள் என்றும், சிவ சமபந்தமான பத்தர்களிடத்தில் கருணையுள்ளவர் என்றும்,