பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 219

 

நாடு மகத்தெற் கிடுக்கன் வந்தது தீரிடுதற்குப் பதத்தை யுந்தரும்:-

முருகனையே நாடுகின்ற உள்ளத்தையுடைய அருணகிரி நாருக்கு வந்த துன்பத்தை யொழிக்கும் பொருட்டு முருகன் தன்பாதாம்புயத்தைத் தந்தருளினார். இது அவருடைய சரித்திரக் குறிப்பு.

சடத்தினின்றுயிரா னதுறத்தற் கிரக்க முஞ்சுப சோபன முய்க்கக் கருத்தும் வந்தருள் புரிவோனே:-

அருணகிரியார், தமக்குற்ற பிணியின் மிகுதியால் உயிர் துறக்க முயன்றபோது, கந்தவேள் கருணையுடன் காட்சிதந்து ஆட்கொண்ட வரலாற்றை இந்த அடி குறிக்கின்றது.

ஓத எழுத்துக் கடக்கமும்:-

ஓதப்படுகின்ற எழுத்துக்களாகிய மந்திரங்கள் உட்பொருள் முருகவேள்.

ஓமெனெழுத்துக்கு குயிர்ப்பு மென்:-

ஓங்கார எழுத்தின் உயிர் நாடியாக விளங்குபவர் குமாரக் கடவுள்.

ஓதியிணர்த்திக் குகைக்கிடும்:-

ஓதி என்பது ஓதியென வந்தது. ஒதிய மரங்கள் நல்ல மலர்களைக் குகையில் இட்டு நிரப்பும் வளப்பமுள்ள மலை ஊதி மலை.

இம்மலை கோவ மவாட்டத்தில் தாராபுரத்திலிருந்து காங்கேயம் போகும் வழியில் 10 கல் தொலைவில் உள்ளது.

கருத்துரை

ஊதிமலை முருகா, ஞானகுணத்தைத் தந்து உனை வணங்க அருள்செய்வீர்.

குருடிமலை

170

கருடன்மிசைவரு கரிய புயலென
கமல மணியென                      வுலகோரைக்
கதறி யவர்பெயர் செருகி மனமது
கருதி முதுமொழி                      களைநாடித்
திருடி யொருபடி நெருடி யறிவிலர்
செவியில் நுழைவன                 கவிபாடித்
திரியு மவர்சில புலவர் மொழிவது
சிறிது முணர்வகை                    யறிவேனே