வருடை யினமது முருடு படுமகில் மரமு மருதமு மடிசாய மதுர மெனுநதி பெருகி யிருகரை வழிய வகைவகை குதிபாயுங் குருடி மலையுறை முருக குலவட குவடு தவிடெழ மயிலேறுங் குமர குருபர திமிர தினகர குறைவி லிமையவர் பெருமாளே. பதவுரை வருடை இனம்-அதும்-மலைநாட்டின் கூட்டமும், முரடுபடும் அகில் மரமும்- கரடுமுரடான அகில் மரமும், மருதமும்-மருத மரமும் அடிசாய-வேருடன் சாயும்படி, மதுரம் எனும் நதி பெருகி-மதுரம் என்னும் ஆறுவெள்ளம் பெருகி, இரு கரைவழிய-இருகரைகளிலும் வழிய, வருகை வகை குதிபாயும்- பலவகையாகக் குதித்துப் பாய்கின்ற, குருடி மலை உறை-குருடிமலையில் விற்றிருக்கின்ற, முருக-முருகப் பெருமானே! குலவட குவடு தவிடு-எழ-சிறந்த வடமலையாகிய கிரவுஞ்சகிரி தவிடு பொடீயாகுமாறு, மயில் ஏறும்-மயிலில் ஏறிய, குமர-குமாரக் கடவுளே! குருபர-குருபர! திமிர தினகர-அறியாமையாகிய இருளுக்கு ஞான சூரியனே! குறைவில் இமையவர்-குறைவில்லாத தேவர்கள் போற்றும், பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! கருடன் மிசை வரு கரிய புயல் என-கருடன் மேல் வருகின்ற நீலமேக வண்ணராம் திருமால் நீ என்னும், கமலமணி என-பதுமநிதி யென்றும் சிந்தாமணி யென்றும், உலகோரை- உலகத்தவரை-கதறி-சத்தமிட்டுப் பாடி, அவர் பெயர் செருகி-அவர்களின் பேரை அப்பாடலில் நுழைத்து, மனம் அது கருதி-மனத்தில் அவர்கள் தரும் பொருளை நாடி, முதுமொழிகளை நாடித்திருடி-முன்னோர்கள் பாடியுள்ள பழைய மொழிகளைத் தேடி அவற்றைத் திருடி, ஒருபடிநெருடி-ஒருபடி யளவு திரித்துப்பாடி, அறிவு இலர் செவியில் நுழைவன-அறிவில்லாத வருடைய காதில் நுழையும்படி, கவிபாடி திரியும் அவர்-கவிகைப் பாடித்திரிகின்றவர்களாகிய, சிலபுலவர் மொழிவது-சிலபுலவர்கள் கூறுவன, சிறிதும் உணர்வகை அறியேனே- சற்றேனும் அடியேன் அறிந்திலேன். பொழிப்புரை மலையாட்டுக் கூட்டமும், கரடுமுரடான அகில் மரமும், மருதமரமும், வேருடன் சாயும்படி மதுரம் என்ற ஆறு வெள்ளம் பெருகி இரு கரைகளிலும் வழிய பலவகையாகக் குதித்துப் |