பக்கம் எண் :


222 திருப்புகழ் விரிவுரை

 

மதுர மெனநதி:-

மதுரம் என்ற ஆற்றில் வெள்ளம் பெருகி இரு கரைகளிலும் மோதி, மலையாடுகள், அகில் மரங்கள், மருத மரங்கள், முதலியன வேருடம் சாயும்படிக் குதித்து கொண்டுவரும் வளம் பொருந்தியது.

குருடிமலை:-

இது கோவைக்கு அடுத்த துடியலூர் புகைவண்டி நிலையத்துக்கு அருகில் உள்ளது.

கருத்துரை

குருடி மலை வாழுங் குமர! திருடிநெருடி கவிபாடும் புலவர்களின் நெறியில் என் மனம் செல்லாது.

தென்சேரிகிரி

171

எங்கேனு மொருவர்வரஅங்கேக ணினிதுகொடு
இங்கேவ ருனதுமயல்    தரியாரென்
றிந்தாவெ னினியிதழ் தந்தேனை யுறமருவ
என்றாசை குழையவிழி     யிணையாடித்
தங்காம லவருடைய வுண்டான பொருளுயிர்கள்
சந்தேக மறவெபறி     கொளுமானார்
சங்கீத கலவீநல மென்றோது முததிவிட
தண்பாடு முனதருளை     யருள்வாயே
சங்கோடு திகிரியது கொண்டேயு நிரைபிறகு
சந்தாரும் வெதிருகுழ    லதுவூதி
தன்காதல் தனையுகள என்றேழு மடவியர்கள்
தங்கூறை கொடு மரவி லதுவேறுஞ்
சிங்கார அரிமருத பங்கேரு கனுமருள
சென்றேயும் அமரருடை     சிறைமீளா
செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர்தொழு
தென்சேரி கிரியில் வரு    பெருமாளே.

பதவுரை

சங்கோடுதிகிரி அது-சங்கத்துடன் சக்கரத்தை, கொண்டு-கரங்களில் தாங்கிக் கொண்டு, ஏயும் நிரை பிறகு-சேர்ந்துவாழும் பசுக்கூட்டத்தின்