பின்னே, சந்து ஆரும் வெதிரு குழல் அது ஊதி-ஏழிசைகளை யுண்டாக்கும் தொளைகளோடு கூடிய மூங்கிற் குழலை இசையுடன் ஊதியும், தன் காதல் தனை உகள என்று-தன்னிடத்துக் கொண்ட காதலை மேலும் வளர்க்க என்று, எழு மடவியர்கள்தம்-மன எழுச்சியையுடைய கோப கன்னிகைகளுடைய, கூறை கொடு-சீலைகளைக் கவாந்து கொண்டு, மரம்இல்-மரத்தில், ஏறும் - ஏறியும் திருவிளையாடல் செய்த, சிங்கார-மிக்கஅழகுடைய, அரி மருக-திருமாலுடைய திருமருகரே! பங்கேருகனும் மருள-பிரமதேவரும் திகைக்கும்படி, சென்று- போர்க்கலத்திற் போய் ஏயும் அமரர் உடை-பொருந்தியுள்ள தேவர்களுடைய, சிறை மீள-சிறைமீட்கும் பொருட்டு, அசுரர்களை செண்டு ஆடி-அசுரர்களைச் செண்டுபோல் எறிந்து அழித்து, ஒன்றாக அடியார்தொழு-ஒருமைப்பாட்டுடன் அடியார்கள் தொழுகீன்ற, தென் சேரிகிரியில் வரு-தென்சேரிமலை யென்னும் திருத்தலத்தில் வந்து அமர்ந்த, பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! ஏங்கேனும்-எவ்விடத்திலாயினும், ஒருவர் வர-ஒரு மனிதன் வந்தால், அங்கே- அவ்விடத்திலே-கண் இனிது கோடு-குளிர்ச்சியாகப் பார்துக் கண்வலையை வீசி, இங்கு ஏவர் உனது மயல் தரியார் என்று-“இவ்விடத்தில் உங்களைக் கண்டால் யார்தான் மோகமுற்று மயங்கமாட்டார்கள்? யாரும் மயங்கி விடுவார்கள்” என்று பேசி, என் இனிய இதழ் இந்ா-“என்னுடைய இனிமையான அதரபானம் இந்தா பெற்றுக் கொள்ளுங்கள், தந்தோனை யுறமருவ-இதழ் தந்த என்னைப் பொருந்தத் தழுவுங்கள்”, என்று ஆசை குழைய-என்று சொல்லி ஆசையால் உள்ளமும் உடம்பும் குழையும்படி, விழி இணை ஆடி-இரண்டு கண்களையும் சுழற்றி, அவருடைய-தம்மை வந்தடைந்த ஆடவர்களுடைய, உண்டான பொருள் உயிர்கள்-அவர்களுக்கு உள்ள பொருள் அத்தனையும் உயிரையும், தங்காமல்-அவர்களிடத்தில் தங்குதலின்றி, சந்தேகம் அறவே பறிகொள்ளும்- ஐயஞ்சிறிதுமின்றி சூயைாடுகின்ற, மானார்-விலைமாதர்களுடைய, சங்கீத கலவி நலம் என்று ஓது-இசையோடு கூடிய கலவி இன்பம் என்று சொல்லப்படுகின்ற, உததிவிட-காமசமுத்திரத்தை விட்டுக் கரையேறுமாறு, தண்பாரும்-குளிர்ச்சிமிக்க, உனது அருளை-தேவரீருடைய திருவருளை, அருள்வாயே-கொடுத்தருள்வீர். பொழிப்புரை சங்குசக்கரத்தைத் திருக்கரத்தில் தாங்கியும், கலந்து வாழும் நற்குணமுடைய பசுக்கூட்டத்திற் பின் சென்று அவற்றை மகிழ்விக்கும் பொருட்டு, (ஏழிசைகளை வெளிப்படுத்துகின்ற) தொளைகளையுடைய வேய்ங்குழலை இனிது இசைத்தும், தன்னிடத்துக் கொண்ட காதலை மேலும் வளர்க்கும் பொருட்டு, |