பக்கம் எண் :


226 திருப்புகழ் விரிவுரை

 

தங்கூறை கொடு மரமில்:-

ஆயர்பாடியில் கோபிகன்னிகைகள் கண்ணனைக் கணவனாகப் பெறும்பேற்றை விரும்பி மார்கழி மாதம் 30 நாட்களும் யமுனையில் நீராடி கௌரிநோன்பு நோற்க, முடிவு நாளையில், விரத பலனைத்தரும் பொருட்டும், ஆடையின்றி நீராடுவது தவறு என்பதையுணர்ந்தும் பொருட்டும் கண்ணபிரான் அவர்கள் ஆடைகளை கவர்ந்து மரத்தின்மீது ஏறி அவர்கள் வணங்க அளித்த வரலாற்றைத் தெரிவிக்கும் விரிவை, திருப்புகழ் விரிவுரை 3ஆம் தொகுதி 65ஆம் பக்கத்தில் காணவும்.

மரமில் என்பதில் அத்துச்சாரியை கெட்டிருக்கின்றது. எழு என்பது சந்தத்தையொட்டி ஏழு என நீட்டல் விகாரம் பெற்றது.

தென்சேரிகிரி:-

இத்திருத்தலம். கோயமுத்தூர் ஜில்லா, பல்லடத்திற்குத் தெற்கே 12 மைல் தூரத்தில் உள்ளது.

கருத்துரை

திருமால் மருக! தென்சேரிகிரி நாதா! மாதர் மயக்கமாகிய கடலினின்று கரையேறி உய்ய அருள்புரிவீர்.

172

கொண்டாடிக் கொஞ்சு மொழிகொடு
கண்டாரைச் சிந்துவிழிகொடு
கொந்தாரச் சென்ற குழல்கொடு       வடமேருக்
குன்றோடொப் பென்ற முலைகொடு
நின்றோலக் கஞ்செய் நிலைகொடு
கொம்பாயெய்ப் புண்டவிடைகொடு     பலரோடும்
பண்டாடச் சிங்கி யிடுமவர்
விண்டாலிக் கின்ற மயிலன
பண்பாலிட் டஞ்செல் மருளது        விடுமாறு
பண்டே செற் றந்து பழமறை
கொண்டேதர்க களங்களறவுமை
பங்காளர்க் கன்று பகர்பொருள்       அருள்வாயே
வண்டாடத் தென்றல் தடமிசை
தண்டாதப் புண்ட ரிகமலர்
மங்காமற் சென்று மதுவைசெய்      வயலூரா