பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 227

 

வன்காளக்கொண்டல் வடிவொரு
சங்க்ராமக் கஞ்சன் விழவுரை
மன்றாடிக் கன்பு தருதிரு                   மருகோனே
திண்டாடச் சிந்து நிசிரர்
தொண்டாடக் கண்ட வமர்பொரு
செஞ்சேவற் செங்கை யுடையஷண்     முகதேவே
சிங்காரச் செம்பொன் மதிளத
லங்காரச் சந்த்ர கலைதவழ்
தென்சேரிக் குன்றி லினிதுறை          பெருமாளே

பதவுரை

வண்டு ஆட-வண்டுகள் மகிழ்ந்து விளையாட, தென்றல் தடம் மிசை தண்டாத-தென்றல்-காற்று வீசும் குளத்தை நீங்காதுள்ள, புண்டரிக மலர் மங்காமல் சென்று-தாமரை மலர்கள் வாட்ட மடையாமல் அவற்றிடம் போய், மதுவை செய்-தேனைப்பருகும், வயலூரா-வயலூர் ஆண்டவனே! வன் காள கொண்டல் வடிவு-வலிமைமிக்க கரிய மேகத்தின் வடிவுடையவனாய், ஒரு சங்க்ராம கஞ்சன் விழ உதை-ஒப்பற்ற போர்புரியும் கம்சன் இறந்து விழும்படி உதைத்து, மன்றாடிக்கு-வதாடிய கண்ணபிரானுக்கு, அன்பு தரு-அன்பை விளைவிக்கும், திருமருகோனே-அழகிய மருகரே! சிந்து நிசி சரர் திண்டாட- சிதறுண்ட அசுரர்கள் திண்டாடும்படியாகவும், தொண்டாட-அடிமை பூணும்படியாகவும், கண்ட அமர்பொரு-கண்டித்துப்போர் புரிந்த, செம்சேவல் செம்கை உடைய-சிவந்த சேவலைச் செம்கையில் கொண்ட, சண்முக தேவே- ஆறுமுகக் கடவுளே! சிங்கார செம்பொன் மதில் அது-அழகிய செம்பொன் மதிலின், அலங்காரம்-அலங்காரம் உடையதாய், சந்திரகலை தவிழ்- சந்திரனுடைய கலை தவழுகின்றதாய், விளங்கும், தென்சேரி குன்றில் இனிது உறை-தென்சேரி மலையில் இன்பத்துடன் வீற்றிருக்கும், பெருமாளே- பெருமையிற் சிறந்தவரே! கொண்டாடி-சிறப்பித்துப் பேசி, கொஞ்சு மொழி கொடு-கொஞ்சிப் பேசுகின்ற சொற்களைக் கொண்டும், கண்டாரை சிந்து விழி கொடு-தம்மைக் கண்டவர்களின் உள்ளத்தை வெட்டியழிக்குங் கண்களைக் கொண்டும், கொந்து ஆர சென்ற குழல் கொடு-பூங்கொத்துக்கள் நிரம்பப் புகுத்தியுள்ள கூந்தல் கொண்டும், வடமேரு குன்றோடு ஒப்பு என்ற முலை கொடு-வடமேருமலைக்கு நிகரான கொங்கைகளைக் கொண்டும், நின்று ஒலக்கம் செய்நிலை கொடு-நின்று சபாமண்டபத்தில் கொலு விருப்பது போன்ற நிலை கொண்டும், கொம்பாய் எய்பபு உண்ட இடைகொடு கோல்போல் இளைத்த இடைகொண்டும், பலரோடும்-பலருடனும்,