தென்சேரிமலைமேவும் தேவா! மாதர் மயல் தீர, சிவபெருமானுக்கு உபதேசித்ததை, அடியேனுக்கும் உபதேசித்து அருள்வீர். கொங்கணகிரி ஐங்கரனை யொத்தமன மைம்புல மகற்றிவள ரந்திபக லற்றிநினை வருள்வாயே அம்புவி தனக்குள்வளர் செந்தமிழ் வழுத்தியுனை அன்பொடு துக்கமன மருள்வாயே தங்கிய தவத்துணர்வு தந்தடிமை முத்திபெற சந்திர வெளிக்கு வழி யருள்வாயே தண்டிகை கனப்பவுசு எண்டிசை மதிக்கவளர் சம்ப்ரம விதத்துடனெ யருள்வாயே மங்கயைர்சுகத்தை வெகு இங்கித மெனுற்றமன முன்றனை நினைத்தமைய அருள்வாயே மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரக்ஷைபுரி வந்தணைய புத்தியினை யருள்வாயே கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையிலப்பரருள் கொண்டு உடலுற்றபொரு ளருள்வாயே குஞ்சர முகற்கிளைய கந்தனென வெற்றிபெறு கொங்கண கிரிக்குள்வளர் பெருமாளே. பதவுரை குஞ்சர முகற்கு-யானைமுகமுடைய விநாயகப் பெருமானுக்கும், இளைய- இளையவராகிய, கந்தன் என வெற்றிபெறு-கந்தப் பெருமான் என்று அசுரர்களையெல்லாம் வெற்றி பெறுகின்ற, கொங்கணகிரிக்கு உள்ளவர்- கொங்கணகிரி என்னுந் திருமலையில் எழுந்தருளி வளர்கின்ற, பெருமாளே- பெருமையிற் மிக்கவரே! ஐங்கரனை ஒத்த மனம்-ஐந்து திருக்கரங்களையுடைய விநாயகப் பெருமானைப் போல் எல்லாக் காரியங்களுக்கும் முற்படுகின்ற மனமானது, ஐம்புலம் அகற்றி-மெய் வாய் கண் மூக்குச் செவி என்ற ஐந்து புலன்களின் வழியே செல்லுந் தொழிலை நீக்கி, வளர்-வினைகளை வளர்க்கின்ற, அந்தி பகல் அற்ற நினைவு அருள்வாயே-மறப்பு நினைவு என்றகேவ கலசங்கள் கழன்று நினைவற்ற நினைவைத் தந்தருள்வீர், அம்புவி தனக்கு உள் வளர்- |