பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 231

 

அழகிய பூமண்டத்தில் என்றும் நின்று வளர்கின்ற, செம்தமிழ்வழுத்தி- செம்மைப் பண்புடைய தமிழ் மொழியால் பரவுதல் புரிந்து, உனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே-தேவரீரை அன்போடு துதிப்பதற்கு நன் மனத்தை யருள்புரிவீர்; தங்கிய தவத்து, உணர்வு தந்து-நிலைபெற்ற தவத்தினலெய்தும் சிவகதியைப் பெறுமாறு, சந்திர வெளிக்கு-சந்திரவொளி வீசுகின்ற மேலைவெளிக்கு, வழி அருள்வாயே, வழியை அருள்புரிவீர். தண்டிகை- பல்லக்கு, கனபவுசு-பெருமை தங்கிய உயர்வு முதலியவற்றுடன், எண்திசை மதிக்க வளர்-எட்டு திசைகளிலுள்ளோரும் மதிக்குமாறு வளர்ச்சியடைகின்ற, சம்ப்ரம விதத்து உடனே அருள்வாயே-மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்கின்ற பெருவாழ்வை அருள்புரிவீர், மங்கையர் சுகத்தை-பெண்களது இன்பத்தை, வெகு இங்கிதம் என உற்றமனம்-மிகுந்த இனிமையென்று எண்ணி அதில் சேர்ந்துள்ள மனமானது, உன்தனை நினைத்து அமைய அருள்வாயே-தேவரீரை சதா தியானித்து அமைதியடைய அருள்புரிவீர்; மண்டலிகர்-அரசர்கள், ரா பகலும்-இரவு பகலும், வந்து சுபரக்ஷைபுரி-நன்னெறி சேர்ந்து உயிர்களை நன்மையாகக் காத்து அரசுபுரிந்து, வந்து அணைய புத்தியினை அருள்வாயே- சிவநெறியிலே வந்து சேர நல்லறிவைத் தந்தருள்வீர், கொங்கில்- கொங்குநாட்டில், தென்கரையில்-அவிநாசி என்ற திருத்தலத்தின் அணித்தாயுள்ள ஏரியில் தென்கரையில், அப்பர் அருள்கொண்டு- சிவபெருமானுடைய திருவருளைக் கொண்டு, உயிர் பெற்று வளர் உடல் உற்ற பொருள்-இழந்த உயிரைப்பெற்று முதலைவாயினின்றும் உடம்பு வெளிப்பட்ட திருவருட் செல்வத்தை, அருள்வாயே-அருளுவீராக.

பொழிப்புரை

யானைமுகமுடைய விநாயகப் பெருமானுக்கு இளையவராக விளங்கி, மூன்று உலகங்களையுந் தனது வலிமையால வற்றச் செய்து வெற்றிக்கொள்ளும், கொங்கணகிரி எனுந் திருமலைமேல் எழுந்தருளி வளர்கின்ற பெருமிதமுடையவரே! விநாயகரைப் போல் எல்லாக் காரியங்களிலும் முற்படுகின்ற மனத்தை ஐம்புலன்களின் வழியே செல்லவொட்டாது தடுத்து நினைப்பு மறப்பு நீங்கிய சகச நிலையில் நிற்க அருள்புரிவீர். பூமண்டலத்தில் வளர்கின்றதாகிய செந்தமிழ்ப் பாடலால் தேவரீரை அன்புடன் துதிசெய்து உய்யுமாறு நன்மனத்தை யருள்புரிவீர்; நிலைபெற்ற தவத்தால் வருகின்ற மெய்யுணர்வைத் தந்து அடியேன் சிவகதி பெறுமாறு சந்திர மண்டலமாகிய குளிர்ந்தமேலைப் பெருவெளிக்கு வழியை அருள்புரிவீர்; பல்லக்கு மிக்க உயர்வு முதலியவற்றுடன் எட்டுத் திசைகளிலுள்ள யாவரும் மதிக்குமாறு