பக்கம் எண் :


234 திருப்புகழ் விரிவுரை

 

“மன்னன் கோன்முறை யரசுசெய்க”
   நெல்லு முயிரன்றே நீரும் உயிரன்றே
   மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்    - புறநானூறு

ஆதலால் அரசன் எவ்வழியோ அவ்வழி குடிமகள் நிற்பர். எனவே அரசன் நன்னெறி நிற்கில் குடிகளும் திருந்தி நல்வழிப்படுவர். மன்னன் உலகிற்குத்தான், அரசன் என்று எண்ணாது காவலன் என்று எண்ணுதல் வேண்டும்.

கொங்கிலுயிர் பெற்று.........................................அருள்வாயே:-

அவிநாசியில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் மகனை இழந்து வருந்துந் தாய்தந்தையரைக் கண்டு உள்ளம் இரங்கி, நீர் வற்றி ஏரியினிடம் போய்.

“உரைப்பா ருரையுகந் துள்கவல்லார் தங்க ளுச்சியாய்
   அரைக்கா டரவா ஆதியு மந்தமு மாயினாய்
   புரைக்காடு சோலைப் புக்கொளியூ ரவிநாசியே
   கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே”

என்று பாடியருளலும் வருணன் நீரையும் பிரமன் முதலையையும், முதலை வயிற்றில் பிள்ளை உடம்பையும், இயமன் பாலன் உடம்பில் உயிரையும் விட்டனர்கள். முதலை வாயினின்றும் பாலன் வெளிப்பட்டனன். அத்திருவருட் செல்வத்தைத் தருமாறு வேண்டுகின்றனர்.

கருத்துரை

இபமாமுகன்றனக்கு இளையவேர! கொங்கணகிரியில் வாழும் குமாரக் கடவுளே! மனம் அடங்கவும், தமிழால் துதிக்கவும், மேலைவெளிக்கு வழியும், இன்பநிலையும் தியான நிலையும், அரசர் நன்னெறி நிற்கவும், திருவருட் செல்வமும் தந்தருள்வீர்.

தீர்த்தமலை

174

பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை
கூற்று வருவழி பார்த்து முருகிலை
பாட்டை யனுதின மேற்று மறிகிலை      தினமானம்
பாப்பணியனருள் வீட்டை விழைகிலை
நாக்கி னுனிகொடு ஏத்த அறிகிலை
பாழ்த்த பிறவியி லேற்ற மனதுநல்       வழிபோக