மாட்ட மெனுகிறை கூட்டை விடுகிலை யேட்டின் விதிவழி யோட்டமறிகிலை பார்த்து மினியொரு வார்த்தை அறைகுவ னிதுகேளாய் வாக்கு முனதுள நோக்கு மருளுவ னேத்த புகழடி யார்க்கு மெளியனை வாழ்த்த இருவினை நீக்கு முருகனை மருவாயோ ஆட்டி வடவரை வாட்டி யரவொடு பூட்டி திரிபுர மூட்டி மறலியி னாட்ட மறசர ணீட்டி மதனுடல்
திருநீறாய் ஆக்கி மகமதை வீட்டியொருவனை யாட்டின் முகமதை நாட்டி மறைமக ளார்க்கும்வடுவுற வாட்டு முமையவ
னருள்பாலா சீட்டை யெழுதிவை யாற்றி லெதிருற ஓட்டியழல்பசை காட்டி சமணரை சீற்ற மொடுகழு வேற்ற அருளிய
குருநாதா தீர்த்த எனதக மேட்டை யுடனினை ஏத்த அருளுட னோக்கி அருளுதி தீர்த்த மலைநகர் காத்த சசிமகள்
பெருமாளே. பதவுரை ஆட்டி-அகில வுலகங்களையும் ஆட்டிவைப்பவராகிய சிவபெருமான், வடவரை வாட்டி-மேருமலையை வருத்தி வில்லாக வளைத்து, அரவொடு பூட்டி-வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கட்டி, திரிபுரம் மூட்டி-திரிபுரத்தில் தீயை மூட்டி வேக வைத்து, மறலியின் நாட்டம் அற-கூற்றுவனுடைய கருத்து அழியும்படி, சரண் நீட்டி-திருவடியை நீட்டி உதைத்துத்தள்ளி, மதன் உடல் திருநீறு ஆய் ஆக்கி-மன்மதனுடைய உடம்பைச் சாம்பலாகும்படிச் செய்து, மகம் அதை வீட்டி-தக்கனுடைய யாகத்தை அழித்து, ஒருவனை- அந்தயாகத்தின் தலைவனான தக்கனுக்கு, ஆட்டின் முகம் அதை நாட்டி- ஆட்டின் முகத்தைப் பொருத்த, வைத்து, மறைமகளர்க்கும் வடுவ உறவாட்டும்- சரஸ்வதி தேவிக்கு காயம் உண்டாகும்படி வாட்டிய, உமை அவன் அருள்பாலா-உமாநாதராகிய சிவபெருமான் அருளிய திருக்குமாரரே! சீட்டைஎழுதி-வாழ்க அந்தணர் என்று திருப்பாசுரத்தை எழுதிய சீட்டை வையாற்றில் எதிர் உற ஓட்டி-வையை யாற்றில் எதிரேறுமாறு ஓட்டியும், அழல் பசை காட்டி-நெருப்பில் இட்ட ஏடு பச்சையாக இருக்கும்படி காட்டியும், சமணரை-சமணர்களை சீற்றமொடு கழு ஏற்ற அருளிய- |