பக்கம் எண் :


236 திருப்புகழ் விரிவுரை

 

சினத்துடன் கழுவில் ஏற்றுமாறு அருள்புரிந்த, குருநாதா-குருநாதரே! தீர்த்த- தூயவரே! எனது அகம் ஏட்டை உடன்-என்னுடைய மனம் விருப்புடன், நினை ஏத்த-உம்மையே புகழும்படி, அருளுடன் நோக்கி அருளுதி-தேவரீர் திருவருளுடன் சிறியேனைப் பார்த்து அருள்புரிவீராக., தீர்த்தமலை நகர் காத்த- தீர்த்தமலை நகரைக் காத்தவரே, சசி மகள்-தேவசேனைக்கு, உகந்த, பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! மனதே-ஏ மனமே! ந மேற்கூரிய, பாட்டில் உருக இலை-முருகனுடைய பாட்டைக் கேட்டு உருகவில்லையே! கேட்டும் உரு இலை-அப்பாடலைக் கேட்டும் உருகவில்லையே; கூற்று வருவழிபார்த்தும் உருக இலை-இயமன் வரும் வழியைக் கண்டும் நீ இறைவனை நினைத்து உருகவில்லையே; பாட்டை-துன்பத்தை, அநுதினம் ஏற்றும் அறிகிலை-தினந்தேழறும் ஆநுபவித்தும் உண்மையை உணர்கின்றாயில்லை; தினமானம்-நாள்தோறும், பாப்பு அணியன் அருள்- பாம்பை அணியாக அணிந்த சிவபெருமான் நல்கும், வீட்டை விழைகிலை- முத்தி வீட்டை நீ விரும்புகின்றாயில்லை; நாக்கின் நுனி கொடு-நாவின் நுனியைக் கொண்டு, ஏத்த அறிகிலை-அப்பெருமானைப் புகழுதற்கு விரும்பினாயில்லை; பாழ்த்த பிறவியில் ஏற்ற மனது-பாழும் இந்தப் பிறப்புக்களிலேயே ஈடுபடுகின்ற மனமே! நல் வழிபோக மாட்டம் எனுகிறை- நல்ல வழியிலே போகமாட்டேன் என்கின்றாய், கூட்டை விடுகிலை- சிறைக்கூடமாகிய இந்த உடற்கூட்டை விடுகின்றாயில்லை; ஏட்டின் விதி வழி- ஏட்டில் எழுதியுள்ள தலைவிதியின்படி, ஓட்டம் அறிகிலை-வாழ்க்கையில் ஓட்டம் என்பதையும் அறிகின்றாயில்லை; பார்த்தும்-இப்படியெல்லாம் நீ இருக்கின்றாய் என்பதைப் பார்த்தும், நான் சும்ம விருக்காமல் இனி ஒரு வார்த்தை அறைகுவன்-இனி ஒரு நல்லுரை கூறுகின்றேன். இது கேளாய்-இதை நீ கேட்பாயாக; புகழ் ஏத்த வாக்கும்-அவன் புகழை ஏத்துவதற்கு நல்லவாக்கையும், உனது உள்நோக்கும் அருளுவன்-உனது உள்ளத்தில் நல்ல கருத்தையும் அருள்புரிவான், (ஆதலால்) அடியார்க்கும் எளியனை-தன் அடியார்க்கு எளியவனை, வாழ்த்த இருவினைநீக்கு முருகனை- வாழ்த்துவோருடைய இருவினைகளை விலக்கும் முருகப் பெருமானை, மருவாயே-நீ சேரமாட்டாயோ?

பொழிப்புரை

எல்லா உலகங்களையும் ஆட்டி வைப்பவராகிய சிவபெருமான் வடமேருகிரியை வருத்தி வில்லாக வளைத்து, வாசுகி என்னும் பாம்பை நாணாகப் பூட்டி, முப்புரத்திலே தீயை மூட்டி, இயமனை விழுந்து உருள திருவடியை நீட்டி, மன்மதனுடைய உடம்பு சாம்பலாகுமாறு செய்து, தக்கனது யாகத்தை யழித்து, அத் தக்கனுக்கு