பக்கம் எண் :


24 திருப்புகழ் விரிவுரை

 
118

இலாபமில் பொலவுரை சொலாமன தபோதன
             ரியாவரு மிராவுபக                              லடியேனை
       இராகமும் விநோதமு முலோபமு டன் மோகமு
             மிலானிவ னுமாபுருஷ                         னெனஏய
சலாபவ மலாகர சசீதர விதாரண
             சதாசிவ மயேசுரச                            கலலோக
       சராசர வியாபக பராபர மநோலய
             சமாதிய நூபதிபெணு                           நினைவாயே
நிலாவிரி நிலாமதி நிலாதவ நிலாசன
             நியாயப ரிபாலஅர                             நதிசூடி
       நிசாசர குலாதிப திராவண புயாரிட
             நிராமய சரோருகர                               னருள்பாலா
விலாசுகம் வலாரெனு முலாசவி தவாகவ
             வியாதர்கள் விநோதமகள்               மணவாளா
       விராவுவ யலார்புரி சிராமலை பிரான்மலை
             விராலிம லைமீதிலுறை                   பெருமாளே

பதவுரை

நிலா விரி நிலாமதி-சந்திரிகை விரிந்து ஒளிசெய்கின்ற பிறைச் சந்திரனையும், நிலாத அநில அசனம்-நில்லாது அலைகின்ற காற்றை உணவாகக் கொள்ளுபவனும், நியாய பரிபால - நியாயத்தைக் காக்கவல்லவனும் ஆகிய, அர-ஆதிசேடனாகிய பாம்பையும், நதி சூடி-கங்காநதியையும் சூடினவரும், நிசாசரகுலு அதிபதி-அரக்கர் குலத்துக்குத் தலைவனான, ராவணபுய அரிட- இராவணனுடைய தோள்களை வருந்தச் செய்தவரும், நிர் ஆமய- நோயற்றவரும், சரோருக அரன்-தாமரையின் வீற்றிருப்பவருமான சிவபெருமான், அருள் பாலா-அருளிய புதல்வரே! வில் ஆசுகம் வலார் எனும்- வில்லிலும், அம்புகள், விடுதலிலும் வல்லவர் என்னும் உலாச இத- மகிழ்ச்சியினால் இன்பங்கொண்டு, ஆகவ-போர் செய்யும், வியாதர்கள்- வேடர்களின், விநோத மகள் மணவாளா-அற்புதப் புதல்வியாகிய வள்ளி நாயகியின் கணவரே! விராவு வயல் ஆர்புரி-பொருந்திய வயலூர், சிராமலை- திரிசிராப்பள்ளி, பிரான் மலை-கொடுங்குன்றம் இவற்றில் வாழ்வதுடன், விராலிமலை மீதில் உறை-விராலிமலையின் மேலும் வாழ்கின்ற, பெருமாளே- பெருமையிற் சிறந்தவரே! இலாபம் இல்பொலா உரை சொலா மன தபோதனர்- பயன் இல்லாத பொல்லாத மொழிகளைச் சொல்லாத மனத்தையுடைய தவமுனிவர்கள், இயாவரும்