பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 241

 

தீர்த்த:-

தீர்த்தன் - பரிசுத்தமானவன்.

“ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
   தீர்த்தன்”                                    தீருவெம்பாவை.

எனதக மேட்டையுடனினை ஏத்த அருளுடனோக்கியருளுதி:-

அகம் ஏட்டை; ஏட்டை-விருப்பம்; அகம்-உள்ளம்; உள்ளத்தில் விருப்பமுடன் இறைவனுடைய புகழை ஏத்த வேண்டும். அப்பெருமான் அருட்கண்ணால் நோக்கியருளுவான்.

தீர்த்தமலை:-

மொரப்பூர் புகைவண்டி நிலையத்துக்கு 8 கல் தொலைவில் உள்ள ஹரூக்கு வடகிழக்கே 9.30 கல் தொலைவில் உள்ள தலம். மலையடிவாரத்திலும் மலைமீதும் ஆலயங்கள் இருக்கின்றன. சைவ எல்லப்பநாவல் பாடிய தலபுராணம் உண்டு

கருத்துரை

ஏ மனமே! நீ முருகனை மருவுவாய்.

கனகமலை

175

அரிவையர்கள் தொடரு மின்பத்
துலகுநெறி மிகம ருண்டிட்
டசடனென மனது நொந்திட்           டயராமல்
அநுதினமு முவகை மிஞ்சிச்
சுகநெறியை விழைவு கொண்டிட்
டவநெறியின் விழைவு மொன்றைத்   தவிர்வேனோ
பரிதிமதி நிறைய நின்ஃ
தெனவொளிரு முனது துங்கப்
படிவமுக மவைகள் கண்டுற்         றகமேவும்
படர்கள்முழு வதும் கன்றுட்
பரிவினொடு துதிபு கன்றெற்
பதயுகள மிசைவ ணங்கற்          கருள்வாயே
செருவிலகு மசுரர்மங்கக்
குலகிரிகள் நடு நடுங்கத்
சிலுசிலென வளைகு லுங்கத்         திடமான