செயமுதவு மலர்பொ ருங்கைத் தலமிலகு மயில்கொ ளுஞ்சத் தியைவடுதல் புரியு முன்பிற் குழகோனே கருணைபொழி கிருபை முந்தப் பரிவினொடு கவுரி கொஞ்சக் கலகலென வருக டம்பத் திருமார்பா கரிமுகவர் தமைய னென்றுற் றிடுமிளைய குமர பண்பிற் கனககிரி யிலகு கந்தப் பெருமாளே. பதவுரை செரு விலகு அசுரர் மங்-போரில் பின்னிட்ட அசுரர்கள் மாளவும், குலகிரிகள் நடு நடுங்க-சிறந்த மலைகள் யாவும் நடு நடுங்கவும், சிலுசிலு என அலை குலுங்க-சிலுசிலு என கடல் கலங்கவும், திடம் ஆன-உறுதியுள்ளதும், செயம் உதவும்-வெற்றியைத் தருவதும், மலர் பொரும் கைதலம் இலகும்- மலர்போன்ற திருக்கரத்தில் விளங்குவதும், அயில் கொளும்-கூர்மை கொண்டதுமான, சத்தியை விடுதல் புரியும்-வேலாயுதத்தை விடுத்தருளிய, முன்பில் குழகோனே-பெருமை வாய்ந்த இளையவரே! கருணை பொழி கிருபை முந்த-கருணை பொழியும் அருளே முந்துவதால், பரிவினொடு அன்புடன், கவுரி கொஞ்ச-பார்வதியம்மை கொஞ்சி நிற்க, கலகல என வரு-கலகல என்று தண்டையொலிக்கவருகின்ற, கடம்பதிருமார்பா-கடப்ப மலரையணிந்த திருமார்பை யுடையவரே! கரிமுகவர் தமையன் என்று உற்றிடும்-யானைமுகக் கடவுளை அண்ணனாக வாய்க்கப்பெற்று விளங்கும், இளையகுமர- இளையக்குமாரக் கடவுளே! பண்பின் கனககிரி இலகு-அழகுடன் கனககிரியில் விளங்கி வாழும், கந்த-கந்தப் பெருமாளே! பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! அரிவையர்கள் தொடரும் இன்பத்து-மாதர்களைத் தொடர்ந்து செல்லும்சிற்றின்பத்து, உலகு நெறிமிக மருண்டிட்டு-உலக நெறியில் மிகவும் மருட்சி கொண்டு, அசடன் என மனது நொந்திட்டு-அசடன் எனப்பிறர்கூற மனம் வேதனைப் பட்டு, அயராமல்-சோர்வு அடையாமல், அனுதினமும் உவகை மிஞ்சி.நாள்தோறும் களிப்பு மிகுந்து, சுக நெறியை விழைவு கொண்டிட்டு-சுகவழியிலேயே விருப்பங்கொண்டு நடந்து, அவ நெறியின் விழையுன் ஒன்றை-வீண் மார்க்கத்தில் செல்ல விரும்பும் ஒரு புத்தியை தவிர்வேனோ-நீக்க மாட்டேனோ? பரிதிமதி நிறை நின்ற-சூரியன் சந்திரன் இரண்டும் பூரண ஒளியுடன் நின்ற, அஃது என-அத்தன்மையை ஒப்ப, ஒளிரும் உனது துங்க-விளங்குகின்ற உமது பரிசுத்தமான, படிவ முகம் அவைகள் கண்டு உற்று-வடிவுள்ள திருமுகங்களைத் தரிசித்து |