பரிதிமதி நிறைய நின்றஃதென:- சூரியனும் சந்திரனும் ஒன்றாக ஒளி செய்வதுபோல் முருகப் பெருமானுடைய திருமுகம் விளங்குகின்றது. திருமுடி சூரியனுக்கும், திருமுகம் சந்திரனுக்கும் உவமையாயின. நின்றஃ-இங்கு ஆயுத எழுத்து (ஃ) வல்லோசை சந்தத்தில் நின்றது. அகமேவு படர்கள் ழுமுவது மகன்று:- முருகவேளின் திருமுகங்களைத் தரிசித்த மாத்திரத்தில் மனத்துயர் யாவும் பறந்தோடிவிடும். கனககிரி:- போளூருக்கு 9 கல் தொலைவில் உள்ள தேவிகாபுரத்தின் அருகில் உள்ள மலை கனககிரி. கருத்துரை கனககிரிக் கந்தவேளே! உமது பதமலரைப் பணிய அருள்புரிவீர். புகழிமலை மருவுமலர் வாச முறுகுழலி னாலும் வரிவிழியி னாலு மதியாலும் மலையினிக ரான இளமுலைக ளாலு மயல்கள்தரு மாதர் வகையாலும் கருதுபொரு ளாலு மனைவிமக வான கடலலையில் மூழ்கி அலைவோனே கமலபத வாழ்வு தரமயிலின் மீது கருணையுட னேமுன் வரவேணும் அருமறைக ளோது பிரமன்முதல் மாலும் அமரர்முனி ராஜர் தொழுவோனே அகிலதல மோது நதிமருவ சோலை அழகுபெறு போக வளநாடா பொருதவரு சூரர்கிரியுருவ வாரி புனல்சுவற வேலை யெறிவோனே புகலரிய தான தமிழ்முனிவ ரோது
|