பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 245

 

பதவுரை

அருமறைகள் ஓதும்-அரிய வேதங்களை ஓதுகின்ற, பிரமன் முதல்மாலும் பிரமன் முதலாகத் திருமாலும், அமரர்-தேவர்களும், முநிராஜர்- முனிவேந்தர்களும், தொழுவோனே-தொழப்படுந் தலைவரே! அகில தலம் ஓதும்-எல்லாத் தலங்களில் உள்ளாரும் புகழ்கின்ற, நதி மருவு சோலை-நதி சேர்ந்து சோலைகளால், அழகுபெறு போக-அழகு பெற்ற செல்வம் மிகுந்த, வளநாடா-வளங்கள் கூடிய நாட்டினரே! பொருத வரசூரர்-போர் செய்ய வந்த சூரர்களும், கிரி உருவ-கிரவுஞ்மலையும் உருவவும், வாரிபுனல் கவ-கடலில் நீர் வற்றவும், வேலை எறிவோனே-வேலைவிட்டருளியவரே! புகல அரியது ஆன- சொல்லுதற்கு அரிதான, தமிழ் முனிவர் ஓது-அகத்திய முனிவர் புகழ்கின்ற புகழிமலை மேவு-புகழிமலையில் விற்றிருக்கும் பெருமாளே-பெருமையிற் சிறந்தரே! மருவுமலர் வாசம் உறு-பொருந்திய மலரின் நறுமணம் வாய்ந்த, குழலினாலும்-கூந்தலாலும், வரிவிழியினாலும்-வரிகள் படர்ந்த கண்களினாலும், மதியாலும்-சந்திரனைப் போன்ற முகத்தாலும், மலையின் நிகர் ஆன-மலைக்கு ஒப்பான, இள முலைகளாலும்-இளந்தனங்களிலும் மயல்கள் தரும்- மயக்கங்களைத் தருகின்ற, மாதர் வகையாலும்-பெண்களின் இனத்தாலும், க்ருது பொருளாலும்-நமக்கே உரியது என்று ஏண்ணப்படுகின்ற பொருளாலும், மனைவி மகவு ஆன-மனைவி மக்கள் என்ற, கடல் அலையில் மூழ்கி- கடல்அலையில் அடியேன் மூழ்கி, அலைவேனோ-அலையலாமோ? கமல பத வாழ்வுதர-தாமரை மலர் போன்ற உமது திருவடியையுடைய வாழ்வைத் தந்தருள, மயிலின் மீது-மயில் வாகனத்தின் மீது, கருணை உடனே முன் வரவேணும்-கருணையோடு அடியேன் முன் வந்தருளவேண்டும்.

பொழிப்புரை

அரிய வேதங்களை ஓதகின்ற பிரமதேவன், திருமால், தேவர்கள், முனிவர்கள், ஆகிய இவர்கள் வணங்கும் பெருமானே! எல்லாத் தலங்களும் புகழ்கின்ற நதி சூழ்ந்து சோலைகளால் அழகு பெற்ற செல்வங் கொழிக்கும் வளநாட்டின் தலைவரே! போர் செய்ய வந்த சூரர்களும், கிரவுஞ்சமலையும், ஊடுருவவும், கடலில் நீர் வற்றவும் வேலைச் செலுத்தியவரே! சொல்லுதற்கு அரிதான தமிழ் முனிவராகிய அகத்தியர் புகழ்கின்ற புகழிமலையில் எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே! பொருந்திய மலரின் நறுமணம் வாய்ந்த கூந்தலாலும், வரிகள் கொண்ட கண்களினாலும், சந்திரனையொத்த முகத்தாலும், மலைக்கு ஒப்பான இளந்தனங்களாலும், மயக்கங்களைத் தருகின்ற