பக்கம் எண் :


246 திருப்புகழ் விரிவுரை

 

பெண்களின் இனத்தாலும், தனக்கேயுரியது என்று எண்ணுகின்ற பொருள், மனைவி மக்கள் என்கின்ற கடல் அலையில் மூழ்கி, அடியேன் அலையலாமோ? தாமரையன்ன உமது திருவடிகளைச் சேரும் வாழ்வை அடியேனுக்குத் தந்தருளும் பொருட்டு, மயிலின் மீது கருணையுடன், அடியேன்முன் வந்தருளவேண்டும்.

விரிவுரை

மாதர்வகையாலும்:-

மனிதர்களை மயக்கி அறிவையழிக்கும் பொருள்கள் பல. அவற்றுள் ஒன்று பொது மாதர் உறவு.

கருது பொருளாலும்:-

நமக்கே உரியது என்று அழுத்தமாக எண்ணிக் கொண்டிருக்கின்ற பொருளாசை அபினிபோல் மயக்கத்தைத் தரும்.

மனைவி மகவான கடலையில் மூழ்கி:-

மனைவி மககள்என்ற ஆசைக்கடலில் முழுகி மாந்தர் அலைகின்றார்கள்.

புகழிமலை:-

புகழிமலை கரூக்கு அடுத்த புகலூர் புகைவண்டி நிலையத்துக் 2 கல் தொலைவிள் உள்ள திருத்தலம்.

கருத்துரை

புகழிமலை முருகா! உன் பாதமலர் தந்து வாழ்வுதர மயிலின்மீது வந்தருள்வீர்.

பூம்பறை

177

மாந்தளிர்கள் போல வேய்ந்தவுடல் மாதர்
             வாந்தவிய மாக                                        முறைபேசி
       வாஞ்சைபெரு  மோக சாந்திதர நாடி
                   வாழ்ந்தமனை தேடி                               உறவாடி
ஏந்துமுலை மீது சாந்துபல பூசி
             ஏங்குமிடை வாட                                        விளையாடி
       ஈங்கிசைகள் மேவ லாஞ்சனையி லாமல்
                   ஏய்ந்தவிலை மாதர்                               உறவாமோ
பாந்தண்முடி மீது தாந்ததிமி தோதி
             தாஞ்செகண சேசெ                                     எனவோசை