பாங்குபெறு தாள மேங்கநட மாடு பாண்டவர்ச காயன் மருகோனே பூந்தளிர்கள் வீறு வேங்கைகள் பலாக பூங்கதலி கோடி திகழ்சோலை பூந்தடமு லாவு கோம்பைகள்கு லாவு பூம்பறையில் மேவு பெருமாளே. பதவுரை பாந்தள் முடிமீது-பாம்பின் முடியின் மீது தாந்தமிதி தோதி தாஞ்செகண சேசெ என ஓசை-தாந்ததிமி தோதி தாஞ்செகணசேசெ என்ற ஓசையை, பாங்கு பெறுதாளம் ஏங்க-அழகாகத் தருகின்ற தாளம் ஒலிக்க, நடம் ஆடும்-நடனஞ்செய்கின்றவரும், பாண்டவர் சகாயன்-பாண்டவர்களின் சகாயனுமாகிய கண்ணபிரானுடைய, மருகோனே-மருகரே! பூம்தளிர்கள் வீறு-அழகிய தளிர்கள் விளங்குகின்ற, வேங்கைகள்-வேங்கை மரங்களும், பலாசு-புனமுருக்கு மரங்களும், பூம், கதலி கோடி திகழ் சோலை-அழகிய வாழை மரங்களும் கோடிக்கணக்காக விளங்கும் சோலையும், பூம் தடம்-அழகிய குளங்களும், உலாவு கோம்பைகள் குலாவும்-உலாவித் திரிகின்ற கோம்பை நாய்களும் திகழும், பூம்பறையில் மேவு-பூம்பயைின் வீற்றிருக்கும், பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! மரம் தளிர்கள் போல-மாந்தளிர் போல அழகிய நிறமுள்ள, வேய்ந்த உடல் மாதர்-தோலால் மூடப்பட்ட பொது மாதர்கள், வாந்தவியமாக முறைபேசி-பாந்தவ்யமாக பந்துக்கள் முறையில் அத்தான்! மாமா! என்று அழைத்து-வாஞ்சை பெருமமோக சாந்திதர நாடி-விருப்பத்துடன் பெரிய மோக சாந்தியை தரவேண்டி, வாழ்ந்த மனைதேடி-அப்பொது மாதர்கள் வாழ்ந்த வீடுகளைத் தேடிச் சென்று, உறவு ஆடி-அவர்களுடன் உறவு செய்து, ஏந்துமுலைமீது- உயர்ந்திருக்குந் தனங்களின் மீது, சாந்து பலபூசி-சந்தனம் முதலிய நறுமணங்கள் பல பூசி, ஏங்கும் இடைவாட-இளைத்துள்ள இடை வருந்துமாறு, விளையாடி- அவர்களுடன் விளையாடி, ஈங்கிசைகள் மேவ-இம்சைகள் உண்டாக, வாஞ்சனை இலாமல்-லஜ்ஜையில்லாமல், ஏய்ந்த விலை மாதர்-பொருந்திய பொதுமாதர்களின், உறவு ஆமோ-உறவு ஆகுமோ (ஆகாது). பொழிப்புரை பாம்பின் முடியின் மீது தாந்த திமி தோதி தாஞ்செகணசேசெ என்னும் ஒலியை அழகாகத்தருக்கின்ற தாளம் ஒலிக்க நடனஞ் செய்தவரும், பாண்டவர் துணைவருமாகிய கண்ணபிரானுடைய திருமருகரே! அழகிய தளிர்கள் விளங்கும் வேங்கை மரங்களும், |