ஆடுகின்ற, மனப்பாம்பை நாமும் அடக்கி ஒடுக்கி ஆளவேணும் என்பது இதன் உட்குறிப்பு. கோம்பைகள் குலாவு:- காவல் நாய்களாக உலாவுகின்ற ஜாதி நாய்கள் கோம்பை நாய்கள். பூம்பறை:- கொடைக்கானலுக்கு மேற்கே 8 கல் தொலைவில் உள்ள தலம். கருத்துரை பூம்பறை மேவு முருகா! பொதுமகளிர் உறவு ஆகாது. கழுகுமலை குதலை மொழியினார் நிதிக் கொள் வாரணி முலையை விலைசெய்வார் தமக்கு மாமயல் கொடியது கொடிததால் வருத்த மாயுறு துயராலே மதலை மறுகிவா லிபத்தி லேவெகு பதகர் கொடியவா ளிடத்தி லேமிக வறுமை புகல்வரே யெனக்கு மோஇனி முடியாதே முதல வரிவிலோ டெதிர்த்த சூருடல் மடிய அயிலையே விடுத்த வாகரு முகிலை யனையதா நிறத்த மால்திரு மருகோனே கதலி கமுகுசூழ்வயற்கு ளேயளி யிசையை முரலமா வறத்தில் மீறிய கழுகு மலைமகா நகர்க்குள் மேவிய பெருமாளே. பதவுரை முதல்-முதல்வரே! வரிவிலோடு எதிர்த்த-கட்டப்பட்ட வில்லோடு எதிர்த்த, சூர் உடல் மடிய-சூரபன்மனுடைய உடல் அழியுமாறு, அயிலை விடுத்தவா-வேலாயுதத்தை விடுத்தவரே! கருமுகிலை அனையது ஆம்நிறத்த-கருமேகத்தை ஒத்த நிறத்தையுடைய, மால் திருமருகோனே-திருமாலின் திருமருகரே! கதலி-வாழையும், கமுகு சூழ் வயல்-பாக்கு மரங்களும் சூழ்ந்துள்ள வயல்களில், அளி இசையை முரள- வண்டுகள் இசையை ஒலிக்க, மா அறத்தின் மீறிய-சிறந்த அறச் செயல்கள் மேம்பட்டு விளங்கும், கழுகுமலை மகா நகர்க்கு உள்மேவிய-கழுகுமலையில் சிறந்த நகரத்தில் விற்றிருக்கும் பெருமாளே- |