பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 25

 

எல்லோரும், இரவு பகல்-இரவும் பகலும், அடியேனை- அடியேனைக் குறித்து, இவன், இராகமும் - ஆசையும், விநோதமும்-விளையாடல்களும், உலோபமுடன்-உலோபகுணமும், மோகமும், இலான்-காம மயக்கமும் இல்லாதவன், இவனும் மாபுருஷன் என ஏய-இவனும் ஓர் உயர்ந்த உத்தம புருஷன் என்று சொல்லும் சொல் பொருந்தும் படியாக, சலாபம்-இனிய குணத்தான, அமல ஆகர-தூய்மைக்கு இருப்பிடமான, சசீதர - சந்தினைத்தரித்த, விதாரண-கருணை நிறைந்தவேர! சதாசிவ-சதாசிவமாக இருப்பவரே! மயேசுர-மகேச்சுரரே! சகலலோக-எல்லாவுலகங்களிலும் உள்ள, சர அசர வியாபக-இயங்குவன நிலைத்திருப்பன அனைத்திலும் கலந்திருப்பவரே! பராபர-பரம்பொருளே! மநோலய சமாதி அநுபூதி பெறநினைவாயே-மனம் ஒடுங்கிய சமாதியில் ஒன்றுபடும் நிலையை அடியேன் பெறுமாறு நினைத்தருள வேணும்.

பொழிப்புரை

சந்திரிகை விரிந்து ஒளி செய்யும் பிறைச்சந்திரனையும், நிலைபெறாது அலைகின்ற காற்றைப் பருகுகின்றவனும், நீதி நெறிகளைக் காப்பவனுமான ஆதிசேடனையும், கங்கா நதியையும், சூடியவரும், அரக்கர் குலத் தலைவனான இராவணனுடைய தோள் வருந்துமாறு செய்தவரும், நோயற்றவரும,் தாமரையில் வாழ்பவருமாகிய சிவபெருமானுடைய குமாரரே! வில்லில் அம்பு விடுவதில் வல்லவர்களும், மனமகிழ்ச்சியுடன் போர் புரிபவருமான வேடர்களின் அற்புதமான குமாரியாகிய வள்ளிபிராட்டியின் கணவரே! பொருந்திய வயலூரிலும், திரிசிராமலையிலும், பிரான்மலையிலும், விராலிமலையிலும், வீற்றிருக்கும் பெருமிதமுடையவரே! பயனற்ற வார்த்தகைள்ச் சொல்லாத நன்மமுடையதவமுனிவர் யாவரும் இரவும் பகலும் அடியேனைக் குறித்து, இவன், ஆசையும், விளையாடல்களும், உலோபமும், மோகமும் இல்லாத பெரிய புருஷன் என்று கூறும் சொல் எனக்குப் பொருந்துமாறு, இனிய குணத்ததான, தூய்மைக்கு இருப்பிடமான சந்திரனைத் தரித்த கருணை நிறைந்தவரே! சதாசிவ மூர்த்தியே! மகேச்சுரரே! எல்லா வுலகங்களிலும் உள்ள அசையும் பொருள் அசையாத பொருள் என்ற எல்லாவற்றிலும் நிறைந்திருப்பவரே! பரம்பெருளே! மனம் ஒடுங்கிய சமாதியில் ஒன்றி நிற்கும் நிலையை அடியேன் பெறத் தேவரீர் நினைந்தருவேண்டும்.

விரிவுரை

இலாபமில்பொலாவுரை:-

பயனில்லாத தீய சொற்களைப் பேசுவர் சிலர்.