பக்கம் எண் :


250 திருப்புகழ் விரிவுரை

 

பெருமையிற் சிறந்தவரே! குதலை மொழியினார்-மழலைச் சொல் போல் பேசுபவர், நிதி கொள்வார்-பணத்தைப் பறிப்பவர்கள், அணி முலையை விலை செய்வார்-அழகிய தனத்தைத் தனத்துக்கு விற்பவர்கள் ஆகிய, தளக்கு மாமயல்-பொது மாதர் மீது உள்ள பெரிய மயக்கம், கொடிது கொடிது அதலால்-பொல்லாதது பொல்லாதது, அம்மயக்கத்தால், வருத்தமாய் உறு துயராலே-மன வருத்தமடைந்து வந்த துன்பத்தினால் மதலை மறுகி-மகனாகிய அடியேன் கலக்கம் உற்று, வாலிபத்திலே- இளமையிலே, வெகு பதர்கள் கொடியவாள் இடத்திலே-மிகப் பாவிகளாம் கொடியவர்களிடத்தில் சென்று, மிகவறுமை புகழ்வதே-மிகவும் என் தரித்திர நிலையைக் கூறி நிற்பதே? எனக்குமோ இனி முடியாதே-அடியேனுக்கு இந்த நிலைமை ஒரு முடிவுக்கு வராதோ?

பொழிப்புரை

முதல்வரே! கட்டப்பட்ட வில்லோடு எதிர்த்த சூரபன்மனுடைய உடல் அழியுமாறு வேலை விட்டவரே! கருமேகத்தையொத்த நிறம் படைத்த திருமாலின் திருமருகரே! வாழை கமுகுகள் சூழ்ந்துள்ள வயலின் வண்டுகள் ஒலி செய்ய அறச்செயல்கள் மிகுந்துள்ள கழுகுமலைக் திருநகரில் எழுந்தருளியுள்ள பெருமித முடையவரே! மழலைச் சொல்போல் பேசுபவர்; பணத்தைப் பறிப்பவர்கள்; அழகிய தனத்தைத் தனத்துக்கு விற்பவர்கள் ஆகிய பொது மகளிரின் மீதுள்ள பெரிய மயக்கம் பொடிது, கொடிது அம்மயக்கத்தால் வருத்தமுற்று, மகனாகிய அடியேன் கலக்கமடைந்து, இளமையிலே மிகப்பாவிகளாம் கொடியவர்களிடம் போய், என் வறுமை நிலையைக் கூறி நிற்பதோ? எனக்கு இந்த இழிவு நிலை ஒரு முடிவுக்கு வராதோ?

விரிவுரை

கொடியவாளிடத்திலேமிக வறுமைபுகல்வதே எனக்குமே இனிமுடியாதே:-

தீயவர்களிடத்தில் சென்று என் வறுமையைக் கூறும் சிறுமை எனக்கு நீங்காதோ? நீங்குமாறு அருள் புரியும் என்று முருகரிடம் முறையிடுகின்றார்.

அறத்தில் மீறிய கழுகுமலை:-

சிறந்த தலங்களில் அறங்கள் விளங்கும்.

“மிகுகொடை வடிவினர் பயில் வலிவலம்”  - சம்பந்தர் தேவாரம்.

“தருமமிகு சென்னை”     - இராமலிங்கர்.