கருத்துரை கழுகுமலைக் கந்தவேளே! கணிகையர் உறவு ஆகாது அதுதீர அருள் செய்வீர். கோங்க முகையு மெலிய வீங்கு புளக களப மேந்து குவடு குழையும் படிகாதல் கூர்ந்து குழையை அமளி தோய்ந்து குலவு மினிய தேங்கு கலவி யமுதுண் டியல்மாதர் வாங்கு பகழி விழியை மோந்து பகலு மிரவும் வாயந்த துயிலை மிகவுந் தணியாத வாஞ்சையுடைய அடிமை நீண்ட பிறவி யலையை நீந்தி அமல அடிவந் தடைவேனோ ஓங்க லனைய பெரிய சோங்கு தகர மகர மோங்கு ததியின் முழுகும் பொருசூரும் ஓய்ந்து பிரமன் வெருவ வாய்ந்த குருகு மலையில் ஊர்ந்து மயில துலவுந் தனிவேலா வேங்கை யடவி மறவர் ஏங்க வனிதை யுருக வேங்கை வடிவு மருவுங் குமரேசா வேண்டு மடியர்புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டு மளவி லுதவும் பெருமாளே. பதவுரை ஓங்கல் அனைய பொயி-மலை போன்ற பெரிய, சோங்கு-கப்பல்களும், தகர்-ஆண் சுறா மீன்களும், அ மகரம்-அந்த மகர மீன்களும், ஓங்கு-நிறைந்துள்ள, உததியின் முழுகும்-கடலில் ஒளிந்து, பொருசூரும்-போர் புரிந்த சூரபன்மனும், ஓய்ந்து- தளர்ச்சியடைய பிரமன் வெருவ-பிரமதேவன், அஞ்ச, வாய்ந்த குருகு மலையில்- நலங்கள் அமைந்த கழுகுமலையில், மயில் அது ஊர்ந்து உலவும்-மயிலில் ஏறி உலாவுகின்ற, தனிவேலா-ஒப்பற்ற வேலாயுதரே! வேங்கை அடவி மறவர் ஏங்க- புலிகள் வாழுகின்ற காட்டு வேடர்கள் திகைக்கவும், வனிதை உருக- வள்ளியம்மையின் திருவுள்ளம் உருகவும், வேங்கை வடிவு மருவும்-வேங்கை மரமாகி நின்ற, குமரஈசா-குமாரக் கடவுளே! வேண்டும் அடியர் புலவர்-வேண்டிநிற்கும் அடியார்களும் புலவர்களும், வேண்ட-தேவரீரிடம் வந்து வேண்டுதல் செய்ய, அரிய பொருளை- |