அருமையான பொருள்களை, வேண்டும் அளவில் உதவும்-அவர்கட்கு வேண்டும் அளவில் வழங்குகின்ற, பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! கோங்க முகையு மெலிய-கோங்க மரத்தின் மொட்டும் மெலியும் படியாக, வீங்கு புளக-பருத்து புளகாங்கிதமுற்று, களபம் ஏந்து-சந்தனக் கலவை தரித்த, குவடு குழையும்படி.மலையன்ன தனங்கள் குழையுமாறு, காதல் கூர்ந்து-காதல் மிகுந்து, குழைய அமளிதோய்ந்து-தளிரு மலரும் பரப்பிய அழகிய படுக்கையில் தோய்ந்து, குலவும் இனிய தேங்கு-குலாவுகின்ற இனியதும் நிறைந்ததுமான, கலவி அமுது உண்டு-புணர்ச்சி இன்ப அமுதத்தை யுண்டு, இயல் மாதர் வாங்கு-அழகிய மாதர்கள் செலுத்தும், பகழி விழியை மோந்து-பாணமாகிய கண்களை மோந்து, பகலும் இரவும் வாய்ந்த துயிலை மிகவும்-பகலும், இரவும் ஏற்படுந் தூக்கம் அதிகரிக்கவும், தணியாத வாஞ்சை உடைய அடிமை-குறையாத விருப்பம் பூண்ட அடிமையாகிய சிறியேன், நீண்ட பிறவி அலையை நிந்தி-பெரிய இந்தப் பிறவிக் கடலை நீந்தி, அமல வடிவந்து அடைவேனோ-குற்றமற்ற உமது திருவடியைச் சேரப் பெறுவேனோ? பொழிப்புரை மலைபோன்ற பெரிய கப்பல்களும், ஆண் சுறா மீன்களும், மகர மீன்களும், நிறைந்துள்ள கடலில் ஒளிந்த சூரபன்மன் ஓய்ந்து அடங்க, பிரமதேவன் அஞ்ச, நலங்கள் வாய்ந்த கழுகு மலையில் மயிலிந் ஊர்ந்து உலாவும் ஒப்பற்ற வேலாயுதரே! புலிகள் வாழும் காட்டில் உறையும் வேடர்கள் திகைக்கவும், வள்ளிபிராட்டி அன்பினால் உருகவும், வேங்கை மரமாகி நின்ற குமாரக் கடவுளே! வேண்டுகின்ற அடியவரும் புலவரும் வேண்டியவுடனே அவர்கட்கு வேண்டிய பொருள்களை வேண்டிய அளவில் வழங்கும் பெருமித முடையவரே! கோங் மரத்தின் மொட்டுூம மெலியுமாறு, பருத்து புளகாங்கிதத்தையும் சந்தனக் கலவையும் பூண்ட, மலையன்ன தனங்கள் குழையும்படி காதல் மிகுந்து, தளிரும் மலரும் பரப்பிய அழகிய படுக்கையில் தோய்ந்து குலவுகின்ற, இனிமையானதும் நிறைந்ததுமான புணர்ச்சி இன்ப அமுதத்தை யுண்டு, அழகிய மாதர்கள் செலுத்தும் பாணமாகிய கண்களை மோந்து, பகலும் இரவும் ஏற்படும் தூக்கம் அதிகரிக்கவும், குறையாத விருப்பம் பூண்ட அடியனே், பெரிய இந்தப் பிறவிக் கடலை நீந்திக் குற்றமில்லாத உமது திருவடியைச் சேரப் பெறுவேனோ? விரிவுரை கோங்க முகையும்:- பெண்களின் தனங்கட்குக் கோங்கின் அரும்பு உவமை ஆகும். |