பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 255

 

“கோங்கரும்பன்ன முலையாய்”          - நாலடியார் (400)

பிறவியலையை நீந்தி அமல அடி வந்தடைவேனோ:-

ஆன்மாக்கள் பிறவிப் பெருங்கடலில் அழுந்திப் பன்னெடுங்காலமாகப் பரதவிக்கின்றன. இக்கடலைத் தாண்டவைக்கும் புணை இறைவனுடைய திருவடித்துணை.

“ஏழுபிறவிக்கடலை ஏறவிடு நற்கருணை ஓடக்காரனும்”
                                                         - திருவகுப்பு (4)

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்               - திருக்குறள்.

ஓங்கலனைய பெரிய சோங்கு:-

சோங்கு-கப்பல். ஓங்கல்-மலை. மலைபோன்ற கப்பல்.

“மலையில் மிககுயர்ந்த மரக்கலம்”         - சம்பந்தர்.

வேங்கையடவி:-

வேங்கைப் புலிகள் நிறைந்த காடு. அன்றி வேங்கை மரங்கள் நிறைந்த காடு எனினும் அமையும்.

வேண்டுமடியர் புலனர் வேண்ட அரிய பொருளை வேண்டு மளவிலுதவும்:-

வேண்டுகின்ற அடியார்களும் புலவர்களும் வேண்ட அவர்கட்கு அரிய பொருட்களை வேண்டும் அளவில், வேண்டியவுடனே, வேண்டும் அளவுக்கு, வேண்டியவர்கள் திருப்தியடையுமாறு நிரம்ப வழங்கி எம்பிரான் இன்னருள் புரிகின்றான்.

கருத்துரை

கழுகாசலபதியே! பிறவிக் கடலை நீந்திக் கரைசேர அருள்செய்யும்.

பொதியமலை

181

மைக்க ணிக்கன்வாளி போல
வுட்க ளத்தை மாறி நாடி
மட்டு முற்ற கோதை போத      முடிசூடி
மத்த கத்தி னீடு கோடு
வைத்த தொத்தின் மார்பி னூடு
வட்டமிட்ட வாருலாவு       முலைமீதே
இக்கு வைக்கு மாடை வீழ