பக்கம் எண் :


256 திருப்புகழ் விரிவுரை

 

வெட்கி யக்க மான பேரை
யெத்தி முத்த மாடும் வாயி      னிசைபேசி
எட்டு துட்ட மாதர் பாய
லிச்சை யுற்றெ னாக மாவி
யெய்த்து நித்த மான வீன      முறலாமோ
துர்க்கை பக்க சூல காளி
செக்கை புக்க தாள வோசை
தொக்க திக்க தோத தீத      வெனவோதச்
சுற்றிவெற்றி யோடு தாள்கள்
சுத்த நிர்த்த மாடு மாதி
சொற்கு நிற்கு மாறுதார      மொழிவோனே
திக்கு மிக்க வானி னூடு
புக்க விக்க மூடு சூரர்
திக்க முட்டி யாடு தீர       வடிவேலா
செச்சை பிச்சி மாலை மார்ப
விச்சை கொச்சை மாதி னோடு
செப்புவெற்பில் சேய தான     பெருமாளே.

பதவுரை

துர்க்கை-துர்க்கையும், பக்க சூல காளி-பகுப்புற்று முக்கிளையாகப் பிரிந்த சூலத்தை ஏந்தியவளுமாகிய காளியின், செக்கை புக்க-சிவந்த கையில் உள்ள, தாள ஓசை-தாளத்தின் ஓசையானது, தொக்க, திக்க தோத தீத என ஓத-தொக்க திக்க தோத் தீத என்று ஒலிக்க, சுற்றிவெற்றியோடு-சுழன்று ஜெயத்துடனே, தாள்கள்- திருவடி, சுத்த நிர்த்தம் ஆடும்-ஆதி சொக்கம் நடத்தை ஆடுகின்ற முதல்வராம் சிவபெருமானுடைய, சொற்கு - உபதேசிப்பாய் என்ற சொல்லுக்கு, நிற்குமாறு தாரம் மொழிவோனே-இணங்கும் மறு மொழியை உரைத்தவரே! திக்கு-திசைகளில் மிக்க வானினூடுபுக்க-பெரிய வானினிடத்துஞ் சென்ற, விக்கம் மூடு சூரர்-கர்வத்தால் மூடப்பட்ட சூரர்கள், திக்க முட்டி ஆடுதீர, சிதற அவர்களைத் தாக்கிப் போர்புரிந்த தைரியம் உள்ளவரே! வடிவேலா-கூரிய வேலாயுதரே! செக்கை-வெட்சிமலர், பிச்சி மாலை-பிச்சிப் பூ மாலை அணிந்த, மார்ப-திருமார்பினரே! விச்சை-அறிவுள்ளரும், கொச்சை மாதினோடு-கொச்சை மொழி பேசுபருமாகிய வள்ளி பிராட்டியினுடன், செப்பு வெற்பில்-பொதிய மலையில், சேயது ஆன-குழந்தை முருகனாக விளங்கும், பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! மை கண்-மை பூசிய கண், இக்கன் வாளி போல-கரும்பு வில்லையுடைய